பிபிசியின் அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனை என்பது, மோடி அரசாங்கம் விமர்சனங்களுக்கு பயப்படுவதையே காட்டுகிறது. இந்த மிரட்டல் தந்திரங்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் என்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்து சோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, பிபிசி செய்தி நிறுவனமானது, 2002 குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் ஒன்று வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தநிலையில் இந்த விவகாரத்தை அடுத்து தான் ஒன்றிய அரசு பிபிசி மீது இப்படி ஒரு சோதனை நடவடிக்கையை மேற்கொள்கிறது என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியும் இது குறித்து விமர்சனம் செய்துள்ளது. அதில், பிபிசியின் அலுவலகங்களில் நடந்த ஐடி ரெய்டு விரக்தியை தருகிறது என்றும், இந்த சோதனை மூலம், மோடி அரசாங்கம் விமர்சனங்களுக்கு பயப்படுவதை காட்டுகிறது என்றும், இந்த மிரட்டல் தந்திரங்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் என்றும், இந்த ஜனநாயக விரோத சர்வாதிகாரப் போக்கை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Source : thenewsminute
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.