Aran Sei

’2020 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டு’ – வானிலை ஆய்வு மையம் அறிக்கை

1901ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால், 2020 ஆம் ஆண்டு 8-வது வெப்பமான ஆண்டாக இருக்கிறது என்றும் அதேநேர, 2016 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது வெட்பம் குறைவுதான் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இன்று (ஜனவரி 5) இந்திய வானிலை ஆய்வு  மையம் (ஐஎம்டி) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘நிவார்’ புயல் – இது பருவநிலை மாற்றத்தின் பேராபத்து – அருண்குமார் ஐயப்பன்

அதில், “1901ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால், 2020 ஆம் ஆண்டு 8-வது வெப்பமான ஆண்டாக இருக்கிறது 2006-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டுக்கு இடையேயான 12 ஆண்டுகள் அதிக வெப்பமான ஆண்டுகளாக இருந்தன. 1901 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரை, அதாவது கடந்த 120 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுதோறும் 0.62 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதில் அதிகபட்சமாக ஒரு ஆண்டு 0.99 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. குறைந்தபட்சமாக அதிகரித்த வகையில் 0.24 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.” என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

கஜா புயலுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் – அழிவிலிருந்து மீளாத விவசாயிகள்

“2020 ஆம் ஆண்டில் 0.29 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. 1901 ஆம் ஆண்டிலிருந்து 8-வது வெப்பமான ஆண்டாக 2020 ஆம் ஆண்டு இருக்கிறது.” என்றும் “ஆனால், 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது குறைவுதான். இது 2016 ஆம் ஆண்டில் 0.71 டிகிரி செல்சியல் வெப்பம் அதிகரித்திருந்தது.” என்று வானிலை ஆய்வு  மைய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2016 (0.70 டிகிரி செல்சியஸ்),

2009 (0.55 டிகிரி செல்சியஸ்),

2017 (0.541 டிகிரி செல்சியஸ்),

2010 (0.539 டிகிரி செல்சியஸ்),

2015 (0.42 டிகிரி செல்சியஸ்)

ஆகிய ஆண்டுகள் வெப்பமான ஆண்டுகளாக இருந்து வருகின்றது என்று பட்டியலிட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி : பீதியைக் கிளப்பும் ஊடகங்கள்

மேலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கடந்த 20 ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்தே வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

“இந்தியாவில் கடந்த ஆண்டு நீண்ட கால சராசரி அடிப்படையில், 1961 முதல் 2000 ஆம் ஆண்டு புள்ளிவிவர அடிப்படையில் 109 சதவீதம் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இது சராசரி மழைப்பொழிவை விட அதிகமாகும். அதிலும் குறிப்பாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழையில் 117.7 சதவீதம் மழை பதிவாகியுள்ளது.”  என்று வானிலை ஆய்வு மையத்தினர்  தெரிவித்துள்ளார்.

நாம் நினைப்பதைவிட வேகமாக உருகும் பனிக்கட்டிகள் – ஆய்வில் தகவல்

2020 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையில் நீண்டகால சராசரி அடிப்படையில் 101 சதவீதம் பதிவாகியுள்ளது என்றும் “கடந்த ஆண்டு மழையால் இதுவரை 1,565 பேரும், இடி தாக்கி 815 பேரும் உயிரிழந்துள்ளனர். புயல் காரணமாக 115 பேரும் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரம் கால்நடைகளும் உயிரிழந்துள்ளன’.” என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்