Aran Sei

தேர்தலுக்காக கொரோனா இரண்டாவது அலையை மறைத்த ஒன்றிய அரசு – மருத்துவ ஆராய்ச்சியாளர் குற்றச்சாட்டு

மோடியின் அரசியல் காரணங்களுக்காக, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டதை ஒன்றிய அரசு மறைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தொடங்குவதற்கு சுமார் 8 மாதங்களுக்கு முன்பாக, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விஞ்ஞானிகள், புதிய பாதிப்புகள் குறித்து மதிப்பிட்டனர். முந்தைய நோய் தொற்றுகள் மற்றும் ஆரம்பகால ஊரடங்கு கட்டுப்பாடுகள், நோய் பரவலை கட்டுப்படுத்தியதாக அவர்கள் ஒரு ஆய்வில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த முடிவுகள் பிரதமர் மோடியின் 2 அரசியல் காரணங்களுக்காக மாற்றியமைக்கப்பட்டன. இந்தியாவின் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெக்கவும், மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவிற்காக பிரச்சாரங்களை செய்யவும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வைப் பரிசீலித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த முன்னாள் உறுப்பினர் மருத்துவர் அனுப் அகர்வால், ஆய்வு முடிவுகள் நாட்டை ஒரு தவறான பாதுகாப்பு உணர்வுக்கு தள்ளிவிடும் என தெரிவித்தார்.

டாக்டர் அகர்வால் தனது கவலைகளை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, அவர் கண்டிக்கப்பட்டார்.

நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமாக இருந்த கொரோனா இரண்டாவது அலையின் அறிகுறிகளை மோடி அரசு எவ்வாறு கவனிக்க தவறியது என நாட்டில் பலர் கேள்வி எழுப்பிய நிலையில், மோடியின் அரசியல் இலக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிடுமாறு விஞ்ஞானிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது.

“மக்களுக்கு உதவுவதை விட அரசாங்கத்தின் கதையாடலை முன்னெடுத்துச் செல்ல அறிவியல் ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது” மருத்துவர் அகர்வால் கூறியுள்ளார்.

மருத்துவர்கள் அகர்வால் நிறுவனத்தில் இருக்கும் மூத்த அதிகாரிகள், “ஆவணங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் தரவுகளின்படி, அபாயங்களைச் சுட்டிக்காட்டும் தரவுகளை ஐசிஎம்ஆர் மறைத்தது. அரசாங்கத்தின் முயற்சிகளைக் கேள்விக்குள்ளாக்கும் மற்றொரு ஆய்வை திரும்பப் பெறுமாறு விஞ்ஞானிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

அறிவியலை அரசியலுக்கு பயன்படுத்திய முதல் நாடாக இந்தியா இருக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், முககவசம் அணிதல் ஆகியவற்றிற்கு எதிரான பிரச்சாரம் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இருந்தாலும், அவை குறைந்த எண்ணிக்கையில் தான் காணப்பட்டது.

முறையான மருத்துவ கட்டமைப்பு கொண்ட பெரிய நாடான இந்தியா, கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த போராடி இருக்கும். இருப்பினும், அரசின் அலட்சியமான போக்கால், கொரோனா வைரஸின் புதிய மாதிரி அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தியது. மக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகியவற்றை நிறுத்திவிட்டனர்.

 

தி நியூயார்க் டைம்ஸ் இணையதளத்தில் வெளியான கட்டுரையில் தமிழாக்க சுருக்கம். 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்