Aran Sei

‘மசூதி மனிதன்’ என்றழைக்கப்படும் இந்து கட்டிட கலைஞர் – மத நல்லிணக்கனத்தை தொழிலிலும் வாழ்விலும் காட்டும் கலைஞர்

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கோவிந்தன் கோபாலகிருஷ்ணன், ‘மசூதி மனிதன்’ என அழைக்கப்படுகிறார். அறுபது ஆண்டுகளாக கட்டட கலைஞராக பணியாற்றும் இவர், இதுவரை 12க்கும் மேற்பட்ட மசூதிகள், 4 தேவாலயங்கள் ஒரு இந்து கோவிலைக் கட்டியுள்ளார்.

மத நல்லிணக்கத்தில் உறுதியான நம்பிக்கை கொண்ட கோபாலகிருஷ்ணன், குரான், பைபிள் மற்றும் கீதை என மூன்று மதங்களின் புனித நூல்களின் நகலைத் தன் வீட்டில் வைத்துள்ளார்.

மதுரையில் மீட்டகப்பட்ட பஞ்சமி நிலம் – நடவடிக்கை தொடருமா?

”நான் ரமலான் காலத்தில் நோன்பு இருக்கிறேன், சபரிமலை செல்லும்போது 41 நாட்கள் விரமிருக்கிறேன். மேலும் என் மனைவி ஜெயா ஒரு கிறிஸ்தவர், அவருடன் சேர்ந்து ஈஸ்டர் விரதமும் இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

“என் இரண்டு மகன்களில் ஒருவர் இஸ்லாமிய பெண்ணை மணந்துள்ளார். நான் அனைத்து மதங்களையும் என் வீட்டில் வரவேற்கிறேன், அவர்களுக்குச் சம உரிமை அளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, பள்ளி படிப்பை முடித்தவுடன் கட்டட காண்டராக்டராக இருந்த தந்தை உதவியாளராக பணியாற்றியதாக கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கொங்குநாடு விவகாரம் : ‘நன்றாக இருக்கும் தமிழ்நாட்டை ஏன் பிரிக்க வேண்டும்?’ – வடிவேலு கேள்வி

1960களில் ஆங்கிலோ இந்தியன் கலைஞரான எல்.ஏ. சால்தனாவுடன் ஏற்பட்ட நட்பால், வரைதல் மற்றும் அவற்றின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டதாக கூறும் கோபாலகிருஷ்னன், கேரளா பொதுப்பணித்துறையில் ஊதியம் பெறாத பயிற்சியாளர்காக பணியாற்றியுள்ளார்.

கேரளாவில் புகழ்பெற்ற பாளையம் மசூதியை மறுகட்டமைப்பு செய்யத் தந்தைக்கு உதவியது குறித்து தெரிவித்த அவர், ”கட்டட பணிகள் முடிய முழுமையாக 5 ஆண்டுகள் ஆனது. இது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. கட்டட வடிமைப்பு தான் எனக்காக வேலை என்பதை இந்த காலம் தான் எனக்கு உணர்த்தியது” என குறிப்பிட்டுள்ளார்.

எல்லாமே மோடி என்றால் அமைச்சரவை மாற்றம் எதற்கு – ப.சிதம்பரம் கேள்வி

”மசூதிக்கும் தேவாலயத்திற்கும் இடையில், கிறுஸ்துவ நண்பனின் உதவியுடன் ஒரு மசூதிய ஒரு இந்து கட்டுவது தான் மத நல்லிணக்கத்தின் சிறந்த அடையாளமாக இருக்கும்” என கருதுவதாக கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

source: அல்ஜசீரா

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்