Aran Sei

சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் – உள்துறை அமைச்சரை சந்தித்த ஜார்கண்டின் அனைத்து கட்சி பிரதிநிதிகள்

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சியின் தலைவர்கள் உள்துறை அமித் ஷாவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அவர்கள் அமித்ஷாவிடம் வழங்கியுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சாத்தியம் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்திருக்கும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகளில் பிற மதத்தினர் மீது வெறுப்பு விதைக்கப்படுகிறது – திக்விஜய் சிங் குற்றச்சாட்டு

9 கட்சியின் பிரதிநிதிகள் அடங்கிய இந்த கூட்டத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளும் அடங்குவர்.

அமித்ஷா உடனான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ”ஜார்கண்டின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் சேர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பிற்கான எங்களது கோரிக்கையை அளித்தோம். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காலத்தில் கட்டாயம்” என தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கையொப்பமுட்டுள்ளனர்.

இந்தியா சுதந்திர பெற்றதில் இருந்து சாதிவாரியான தரவுகள் இல்லாதது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்குவதில் சிக்கலை உருவாக்கியுள்ளது என அந்த மூன்று பக்க கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”முன்மொழியப்பட்ட 2021 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் வாரியாக தரவுகள் பிரிக்கப்படாது என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருப்பது துரதிருஷ்டவசமானது. அவர்கள் பல ஆண்டுகளாக பின்தங்கிய நிலையில் உள்ளனர். பிற்படுத்தபட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய முடியவில்லை” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் தேவாலயத்தை இடிக்கப் போவதாக மிரட்டல் விடுத்த விஸ்வ இந்து பரிசத் – குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ள பாதிரியார்

”சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாத நிலையில், ”பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலை மதிப்பீடு செய்யப்படாது” என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”சரியான தரவுகள் இல்லாத பட்சத்தில், அவர்களின் (பிற்படுத்தப்பட்ட மக்களின்) மேம்பாட்டிற்கு ஏற்ற சரியான கொள்கையை வகுப்பது மற்றும் அவர்களின் விகிதாரச்சாரத்திற்கு ஏற்ப வரவு செலவுத் திட்டத்தை வரையறுப்பது இயலாத காரியம்” என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Source : The Hindu

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்