ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த இளம்பெண் கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார், பெண்ணின் இறந்த உடலை இரவோடு இரவாக போலீசார் எரித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இன்று அந்த மனுவை விசாரித்தது.
விசாரணையின் போது, உச்சநீதி மன்றத்தில் உத்தர பிரதேச அரசாங்கம் உறுதிச் சான்று தாக்கல் செய்துள்ளது. வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஏற்கனவே பரிந்துரைத்ததாக அதில் குறிப்பிட்டுள்ளது.
Uttar Pradesh government files affidavit in Supreme Court over #Hathras incident, saying the court must direct CBI investigation into the case for free and fair investigation.
SC should monitor the CBI probe into the case, the affidavit states.
— ANI (@ANI) October 6, 2020
மேலும், வன்முறை சம்பவங்களைத் தடுப்பதற்காக, பெற்றோர் சம்மதத்தோடு பெண்ணின் உடல் அதிகாலையில் எரிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.
வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணை குறித்து விவரித்ததோடு, சிலர் தங்களின் சுய லாபங்களுக்காக நியாயமான முறையில் விசாரணை நடத்துவதற்கு தடையாக செயல்படுகிறார்கள் எனவும் உத்தர பிரதேச அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி, ஒருசில அரசியல் கட்சியினர் சமூக வலைதளங்களில் திட்டமிட்டு சாதி-மத கலவரத்தைத் தூண்டுவதாகவும் உறுதிச் சான்றில் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி பாப்டே தலைமையில், நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு அசாதாரணமானதாகவும், அதிர்ச்சி ஊட்டும் விதத்திலும் இருப்பதாக நீதிபதிகளின் அமர்வு தெரிவித்துள்ளது. மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் இந்திரா, சாட்சிகளுக்கு தகுந்த பாதுகாப்பு கோரினார்.
Supreme Court asks State of Uttar Pradesh to file an affidavit detailing:
~ How witnesses are being protected in the case
~Whether victim's family has chosen a lawyerSC observes, it will ensure that the investigation is smooth.#SupremeCourt #HathrasCase https://t.co/jSCt0xlbwS
— Bar & Bench (@barandbench) October 6, 2020
சாட்சிகளின் பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதையும் புதன்கிழமை தெரிவிக்க வேண்டும் என உத்தரபிரதேச அரசாங்கத்துக்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஹத்ராஸ் வழக்கில் விசாரணை உரிய முறையில் நடைபெறும் என உறுதியளித்து உச்சநீதிமன்றம் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.
தி பிரிண்ட் இணையதளத்தின் நிறுவனர் சேகர் குப்தா ட்விட்டரில் இதுகுறித்து, “ஹத்ராஸ் வழக்கு உத்தர பிரதேசத்தை களங்கப்படுத்தும் நோக்கில் சர்வதேச அளவிலான ஒரு சதித்திட்டம் என்று அரசாங்கம் கூறுவது உண்மையாக இருக்கலாம்.”
May be Yogi Govt is right & Hathras is a global conspiracy to defame UP. In which case, key conspirators must be his cops who burnt the body past midnight, kept family out. And the ‘genius’ DM who not only intimidated the family but also got caught on camera doing so..
— Shekhar Gupta (@ShekharGupta) October 5, 2020
”அப்படி இருக்கும் பட்சத்தில், குடும்பத்தினருக்கு தெரியாமல் நடு ராத்திரியில் பெண்ணின் இறந்த உடலை எரித்த மாநில காவல்துறைதான் இதில் முக்கிய சதிகாரர்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.