Aran Sei

ஹத்ராஸ் கொடூரம் – விசாரணையை தொடங்கியது சிபிஐ

த்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த செப்டம்பர் 14ம் தேதி 19 வயது பெண் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் முதலில் அலிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் செப்டம்பர் 29 சப்டர்ஜுங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து முதலில் ஹத்ராஸில் உள்ள சந்த்பா காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் செப்டம்பர் 14–ம் தேதியன்று கொடுத்த புகாரில், சந்தீப் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

செப்டம்பர் 22ம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண் நான்கு பேர் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார். அதைத்தொடர்ந்து, காவல்துறையினர் மீதமுள்ள மூன்று நபர்களான ராமு, லவ்குஷ், ரவி ஆகியோரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுதும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியதோடு, பாஜக ஆட்சியில் உள்ள உத்தர பிரேதேச அரசின் அணுகுமுறை குறித்தும் பலத்த விமர்சனம் எழுந்தது.

உச்சநீதிமன்றம் உத்தர பிரதேச அரசின் நிர்வாக தோல்வி குறித்து கேள்வி எழுப்பியதை தொடர்ந்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த வழக்கை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐக்கு மாற்ற கோரினார்.

இந்நிலையில், சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. சிபிஐ பல்வேறு கோணங்களில் இந்த வழக்கை விசாரிக்க தனி குழுவை அமைத்துள்ளதாகவும் ஏற்கனவே பிரிவு 302 ன் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வெளியான செய்திக்கு பதிலளிக்கும் விதமாக ராகுல்காந்தி தனது ட்விட்டர் சில பதிவுகளை இட்டுள்ளார்.

அதில் “பெரும்பாலான இந்தியர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் மற்றும் பழங்குடியினரை மனிதர்களாகவே கருதுவதில்லை என்பது வெட்கப்படவேண்டிய உண்மை” என்று கூறியுள்ளார்.

“முதல்வரும், காவல் துறையும் ஹத்ராசில் யாரும் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர். ஏனெனில், அவர்களுக்கும், பெரும்பாலான இந்தியர்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண் மனிதரே இல்லை” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்