இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளுக்கு உடனடியாக நீதித்துறை தலையிட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
டிசம்பர் 17 அன்று டெல்லியில் இந்து யுவ வாஹினி நடத்திய நிகழ்வு மற்றும் டிசம்பர் 19 அன்று உத்தரகண்ட் ஹரித்துவாரில் யதி நரசிங்கானந்த் சரஸ்வதியால் ஏற்பாடு செய்யப்பட்ட தர்ம நாடாளுமன்றம் (தர்ம சன்சத்) நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசப்பட்ட வெறுப்பு பேச்சுக்களைக் கண்டித்து இதில் உடனடியாக நீதித்துறை தலையிட வேண்டுமென உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் 76 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
‘எதிர்ப்பில் வளர்ந்தவர் பெரியார்’ – பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கி.வீரமணி கண்டனம்
இந்த சம்பவங்கள் குறித்துத் தானாக முன்வந்து விசாரணை நடத்துமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இந்தியத் தண்டனைச் சட்டம் 120பி, 121ஏ, 124ஏ, 153ஏ, 153பி, 295ஏ மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளன
அந்தக் கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.
மாண்புமிகு நீதிபதி திரு.என்.வி.ரமணா
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
திலக் மார்க்
புது தில்லி – 110001
பொருள் – ஹரித்துவாரிலும் டெல்லியிலும் இஸ்லாமியர்களின் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட வெறுப்பு பேச்சுகளுக்கு உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருகிறோம்.
மதிய உணவை நிராகரித்த பட்டியல் சமூக மாணவர்கள் – பள்ளியில் காட்டப்படுகிறதா சாதியப் பாகுபாடு?
கடந்த டிசம்பர் 17 மற்றும் 19 தேதிகளுக்கு இடையில் டெல்லி (இந்து யுவா வாஹினி) மற்றும் ஹரித்துவாரில் (யதி நரசிங்கானந்த்) ஏற்பாடு செய்யப்பட்ட 2 தனித்தனி நிகழ்வுகளில், இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்வதற்கான வெளிப்படையான அழைப்புகள் விடுக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களை உங்கள் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வருகிறோம். கீழ்க்கண்ட நபர்களால் தான் இந்த வெறுப்பு பேச்சு பேசப்பட்டுள்ளது.
- யதிநரசிங்கானந்த்கிரி
- சாகர் சிந்துமகராஜ்
- தரம்தாஸ்மகராஜ்
- பிரேமானந்த்மகராஜ்
- சாத்விஅன்னபூர்ணா என்கிற பூஜா ஷகுன் பாண்டே
- சுவாமி ஆனந்த்ஸ்வரூப்
- அஷ்வனிஉபாத்யாய்
- சுரேஷ்சவாங்கே
- சுவாமிபிரபோதனந்த்
மேற்கூறிய நிகழ்வுகளில் பேசப்பட்ட கருத்துக்கள் வெறும் வெறுப்புப் பேச்சுகள் மட்டுமல்ல, மாறாக ஒரு சமூகத்தைக் கொலை செய்வதற்கான வெளிப்படையான அழைப்பு இது. இந்தப் பேச்சுக்கள், நமது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி, கோடிக்கணக்கான இஸ்லாமிய மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் உள்ளது.
சிறுபான்மையினரையும் காந்தியையும் இழிவு படுத்திய இந்துத்துவ தலைவர் – காவல்துறை வழக்குப் பதிவு
மேற்கூறிய நிகழ்வுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, நீங்கள் தானாக முன்வந்து, இந்தியத் தண்டனைச் சட்டம் 1860 இல் 120பி, 121ஏ, 124ஏ, 153ஏ, 153பி, 295ஏ மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
சமீபத்தில் நாம் கேட்கும் இந்த வெறுப்பு பேச்சுக்கள், கடந்த காலங்களில் நாம் கேட்ட இவ்வாறான வெறுப்பு பேச்சுக்களின் ஒரு பகுதியாகும். ஆனாலும் முந்தைய வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக இந்தியத் தண்டனைச் சட்டம் 153, 153ஏ, 153பி, 295ஏ, 504, 506, 120பி, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எனவே, தினசரி நிகழ்வாக மாறிவிட்ட இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க உடனடியாக நீதித்துறை தலையிட வேண்டும். இது தொடர்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32 வது பிரிவின் கீழ் சில மனுக்கள் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ளதாகவும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பன்முக கலாச்சாரங்கள் கொண்ட இந்திய நாட்டின் செயல்பாட்டிற்கு அடிப்படையான அரசியலமைப்பு விழுமியங்கள் ஆகிய இரண்டிற்கும் உங்கள் இறையாண்மையின் அர்ப்பணிப்பை அறிந்து, இந்திய அரசின் நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் உங்களிடமிருந்து விரைவான நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்த்து, இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.
அன்புடன்
கையொப்பமிட்டவர்கள்:
- அஞ்சனா பிரகாஷ், மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் நீதிபதி, பாட்னா உயர்நீதிமன்றம்
- துஷ்யந்த்டேவ், மூத்த வழக்கறிஞர்
- சல்மான் குர்ஷித், மூத்த வழக்கறிஞர்
- பிரசாந்த்பூஷன், வழக்கறிஞர்
- ராஜு ராமச்சந்திரன், மூத்த வழக்கறிஞர்
- ஹஸிபாஅஹ்மதி மூத்த வழக்கறிஞர்
- சி.யு.சிங்மூத்த வழக்கறிஞர்
- மீனாட்சிஅரோரா, மூத்த வழக்கறிஞர்
- விருந்தாகுரோவர், வழக்கறிஞர்
- ஹரின்ராவல், மூத்த வழக்கறிஞர்
- சித்தார்த்டேவ், மூத்த வழக்கறிஞர்
- விபா மகிஜா, மூத்த வழக்கறிஞர்
- கவின்குலாட்டி, மூத்த வழக்கறிஞர்
- பி.வி.சுரேந்திரநாத், மூத்த வழக்கறிஞர்
- பசவ்பிரபுபாட்டீல், மூத்த வழக்கறிஞர்
- எஜாஸ்மக்பூல், வழக்கறிஞர்
- அமிதாஜோசப், வழக்கறிஞர்
- ஷோமோனாகன்னா, வழக்கறிஞர்
- பசைல்அஹ்மத் அய்யூபி, வழக்கறிஞர்
- அமித்ஆனந்த் திவாரி, வழக்கறிஞர்
- ஷதான்ஃபராசத், வழக்கறிஞர்
- ஜக்தீப்எஸ்.சோகர், வழக்கறிஞர்
- முகமதுநிஜாமுதீன்பாஷா, வழக்கறிஞர்
- அனுஜ் பிரகாஷ், வழக்கறிஞர்
- ஷோப்ஆலம், வழக்கறிஞர்
- ராஜேஷ்தியாகி, வழக்கறிஞர்
- பியோலி, வழக்கறிஞர்
- கபீர்தீட்சித், வழக்கறிஞர்
- அல்டானிஷ்ரெயின், வழக்கறிஞர்
- செரில்டிசோசா, வழக்கறிஞர்
- அந்த்லீப்நக்வி, வழக்கறிஞர்
- பிரேர்ணாசதுர்வேதி, வழக்கறிஞர்
- நனிதாஷர்மா, வழக்கறிஞர்
- பயல் கெய்க்வாட், வழக்கறிஞர்
- ரித்தேஷ்தர் துபே, வழக்கறிஞர்
- ஷஹாப்அஹ்மத், வழக்கறிஞர்
- சூர்ய பிரகாஷ், வழக்கறிஞர்
- ஷஷாங்க்ராஜ்சிங், வழக்கறிஞர்
- பிரியங்காசுக்லா, வழக்கறிஞர்
- ஷாலினிகெரா, வழக்கறிஞர்
- ஆதித்யாஸ்ரீவஸ்தவா, வழக்கறிஞர்
- அஃப்ரீன், வழக்கறிஞர்
- சுபாஷ்சந்திரன் கே.ஆர்., வழக்கறிஞர்
- ரவூப்ரஹீம், வழக்கறிஞர்
- குமரேஷ் திரிவேதி, வழக்கறிஞர்
- அனஸ்தன்வீர், வழக்கறிஞர்
- தஹினிபூஷன், வழக்கறிஞர்
- விநாயக்பந்த், வழக்கறிஞர்
- சித்வத்நபி, வழக்கறிஞர்
- விநாயக் பந்த், வழக்கறிஞர்
- அபிஷ்ட்ஹெலா, வழக்கறிஞர்
- சையத்ஜாபர் ஆலம், வழக்கறிஞர்
- சந்திரேசன்பி.ராவ், வழக்கறிஞர்
- ஆதித்யகுமார், வழக்கறிஞர்
- மணி குப்தா, வழக்கறிஞர்
- அபிஷேக் என்.திரிபாதி, வழக்கறிஞர்
- பூர்விஷ்ஜிதேந்திர மல்கான், வழக்கறிஞர்
- ஹர்ஷ்பராஷர், வழக்கறிஞர்
- அவனிபன்சால், வழக்கறிஞர்
- மிஷிகாசிங், வழக்கறிஞர்
- ருக்சனாசௌத்ரி, வழக்கறிஞர்
- லாராஜெஸ்வானி, வழக்கறிஞர்
- கிருத்திகா அகர்வால், வழக்கறிஞர்
- தல்ஹாசலாரியா, வழக்கறிஞர்
- சூர்யராஜப்பன், வழக்கறிஞர்
- நவீன்நாகார்ஜுனா, வழக்கறிஞர்
- மொஹ்தாசிம்சையத், வழக்கறிஞர்
- பாரதிமோகன், வழக்கறிஞர்
- நேஹாரதி, வழக்கறிஞர்
- அனுபாரஸ்தோகி, வழக்கறிஞர்
- மதுர்பாரதியா, வழக்கறிஞர்
- வெர்டிகாமணி திரிபாதி, வழக்கறிஞர்
- யோக்மாயாஎம்ஜி, வழக்கறிஞர்
- சந்திரச்சூர்பட்டாச்சார்யா, வழக்கறிஞர்
- நயன்தாரா ராய், வழக்கறிஞர்
- ஜெயந்த்திரிபாதி, வழக்கறிஞர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.