Aran Sei

தர்ம சன்சத் நிகழ்ச்சி தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளின் நிலை என்ன? – உச்சநீதிமன்றம் கேள்வி

 கடந்த டிசம்பர் மாதம், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் இஸ்லாமியர்களை குறிவைத்து அவர்களுக்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் வெறுப்பூட்டும் பேச்சுக்களை பரப்பிய தர்ம சன்சத் நிகழ்ச்சி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையை அம்மாநில அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது .

டெல்லியைச் சேர்ந்த குர்பான் அலி மற்றும் மூத்த வழக்கறிஞர் அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் இணைந்து இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

உத்தரகாண்ட் மற்றும் டெல்லியில் நடந்த தர்ம சன்சத் நிகழ்ச்சிகளில் காவல்துறை அலட்சியமாக நடந்துகொண்டதாகக் கூறி, மனுதாரர்கள் தாக்கல் செய்த புதிய மனு மீது உச்ச நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.

‘ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்வில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியவர்கள் கைது’ – விடுவிக்கக் கோரி சாமியார்கள் போராட்டம்

நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான நீதிபதிகள், மனுதாரர்கள் தங்களது இப்புதிய மனுவின் நகலை இமாச்சலப் பிரதேசத்தின் நிலை குழுவிடம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று, இமாச்சலப் பிரதேசத்திலும் தர்ம சன்சத்தைப் போன்ற நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக அம்மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள நிகழ்ச்சி தொடர்பாக, இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்லலாம் என்று மனுதாரர்களிடம் நீதிமன்றம் கூறியுள்ளது.

Source: The Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்