Aran Sei

மீண்டும் மசூதியில் அனுமன் பாடல் – உத்தர பிரதேசத்தில் தொடரும் சர்ச்சை

credits : the wire

த்தர பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த உள்ளூர் தலைவரான மனுபால் பன்சால் பாக்பாத் பகுதியில் உள்ள  மசூதியில் காயத்ரி மந்திரத்தையும் அனுமன் பாடலையும் பாடியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் மசூதியில் பாடல்கள் பாடியதை தன்னுடைய முகநூல் பக்கத்தில் நேரலையும் செய்துள்ளார். இது உபியில் நடக்கும் இரண்டாவது சம்பவமாகும்.

சில நாட்களாக முன் சமூக வலைதளங்களில் இஸ்லாமியர் இருவர் கோயிலில் தொழுகை செய்யும் காணொலி வைரலாகி வந்தது. கடந்த அக்டோபர் மாதம் 28-ம் தேதி மதுராவில் இருக்கும் நந்தா பவன் கோயிலில் தொழுகை நடத்தியதற்காக இஸ்லாமியர்கள் நான்கு பேர் மீது 153 ஏ (இரு சமூகங்களுக்கு இடையே பகையை உண்டாக்குவது) 295 (வழிப்பாட்டு தலங்களை அவமதிப்பது) 505 (பொதுஅமைதியை கெடுப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நீதிமன்ற உத்தரவின்பேரில் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோயிலில் தொழுகை செய்த நான்கு நபர்கள் ஃபைசல் கான், சந்த் முகமது, நித்தேஷ் குப்தா, சாகர் ரத்னா ஆகிய அனைவரும் சுதந்திர போராட்ட வீரர் கான் அப்துல் காஃபர் கான் தொடங்கிய குதை கித்மத்கர் (இறைவனின் தொண்டர்கள்) எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்வார்கள் எனவும், குதை கித்மத்கர் அமைப்பு ”தொழுகை செய்த நபர்கள் அங்கிருந்த கோயில் பூசாரியிடம் அனுமதி பெற்ற செய்துள்ளனர்” என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள மசூதியில் அனுமன் பாடலை பாடியதாகவும், ”ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டதாகவும் நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பேசிய மதுராவின் காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் குரோவர் “மத வழிபாட்டு தலங்கள் இருக்கும் இந்த நகரத்தில் கலவரம் தூண்டவோ அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ நடந்து கொண்டால் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்

இந்நிலையில் இன்று மனுபால் பன்சால் என்பவர் மசூதியில் அனுமன் பாடலையும் காயத்ரி மந்திரத்தையும் பாடியுள்ளார். இதை விசாரித்த உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் பன்சால் அந்த மசூதியில் ”அனுமதி பெற்றே” இதை செய்ததாக கூறியுள்ளனர். இது குறித்து பதிலளித்த அந்த மசூதியின் மெளல்வி ஹசன் இதை ஆமோதித்துள்ளார். மேலும் ”இதில் எந்த தவறும் இல்லை, அனைவரும் சகோதரத்துவத்தை வளர்க்கப் பாடுபட வேண்டும்” என மெளல்வி ஹசன் கூறியுள்ளார் .

விஷ்வ இந்து பரிஷத்தைச் சார்ந்த ஒருவர், பாக்பாத் பகுதியில் ஃபுஸ்வாலி மசூதியில் அனுமன் பாடலை பாடுவேன் என மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்