Aran Sei

உத்தர பிரதேச மசூதியில் அனுமன் பாடல் – 4 பேர் கைது

credits : zee

த்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள மசூதியில் அனுமன் பாடலை பாடியதாகவும், ”ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டதாகவும் நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) 151ன் கீழ் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாக கூறி சவுரவ் லம்பார்தார், கன்ஹா, ராகவ் மற்றும் கிருஷ்ணா தாக்கூர் ஆகிய நான்கு இளைஞர்கள் கைது செய்யபட்டுள்ளனர். இதில் சவுரவ் லம்பார்தர் பாஜகவினுடைய இளைஞர் அமைப்பில் பொறுப்பாளாராக செயல்பட்டு வருபவர். மேலும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ”மோடி சங்” மற்றும் ”அசாத் சேனா” எனும் அமைப்பின் தலைவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இஸ்லாமியர் இருவர் கோயிலில் தொழுகை செய்யும் காணொலி வைரலாகி வந்தது. இதை குறிப்பிட்டு பேசிய கைது செய்யப்பட்டவர்கள், கோயிலில் தொழுகை செய்வது சமூக நல்லிணக்கத்துக்கு என்றால் மசூதியில் அனுமன் பாடல் பாடுவதும் சமூக நல்லிணக்கம் தான் என கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி மதுராவில் இருக்கும் நந்தா பவன் கோயிலில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் நான்கு பேர் மீது 153 ஏ (இரு சமூகங்களுக்கு இடையே பகையை உண்டாக்குவது) 295 (வழிப்பாட்டு தலங்களை அவமதிப்பது) 505 (பொதுஅமைதியை கெடுப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கிருக்கும் உள்ளூர் நீதிமன்றத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முதல் தகவல் அறிக்கையின் தகவலின் படி ”இருவர் அந்த கோயிலில் தொழுகை செய்ததாகவும், இரண்டு நபர்கள் அதை தங்கள் கைபேசியில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும்” கூறியுள்ளனர். நந்த் பாபா கோயிலின் பூசாரி கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோயிலில் தொழுகை செய்த நான்கு நபர்கள் ஃபைசல் கான், சந்த் முகமது, நித்தேஷ் குப்தா, சாகர் ரத்னா ஆகிய அனைவரும் சுதந்திர போராட்ட வீரர் கான் அப்துல் காஃபர் கான் தொடங்கிய குதை கித்மத்கர் (இறைவனின் தொண்டர்கள்) எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்வார்கள் எனவும், குதை கித்மத்கர் அமைப்பு ”தொழுகை செய்த நபர்கள் அங்கிருந்த கோயில் பூசாரியிடம் அனுமதி பெற்ற செய்துள்ளனர்” என தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பேசிய மதுராவின் காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் குரோவர் “மத வழிப்பாட்டு தளங்கள் இருக்கும் இந்த நகரத்தில் கலவரம் தூண்டவோ அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ நடந்து கொண்டால் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய மாவட்ட நீதிபதி ராம் மிஸ்ரா ”சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இங்கு யாரும் கிடையாது, இங்கு இருக்கும் அமைதியான சுழலை கெடுக்க முயன்றால் கடுமையாக தண்டிக்கப்படுவர்” என தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்