Aran Sei

கர்நாடகாவில் ஹலால் இறைச்சி விவகாரம் – இஸ்லாமிய வியாபாரியை தாக்கிய பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு

ர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள பத்ராவதி நகரில் ஹலால் இறைச்சி விற்பனை கடை வைத்திருக்கும் இஸ்லாமிய வியாபாரி ஒருவரை பஜ்ரங் தள் உறுப்பினர்கள் தாக்கியுள்ளனர். இதனையொட்டி காவல்துறையினர் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக சிவமொக்கா காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஹலால் இறைச்சி குறித்த பாஜகவின் சர்ச்சை கருத்து – கர்நாடகாவை உ.பி., ஆகுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து இதைப் பற்றி விசாரிப்பதாகக் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்த அடுத்த நாளே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

மேலும், ஹலால் இறைச்சியை விற்பனை செய்வது பொருளாதார ஜிகாத் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறியுள்ளது புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், மார்ச் 30 அன்று மதியம் 12.30 மணியளவில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் சிலர் ஹலால் இறைச்சிக்கு எதிராகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது அவர்கள் ஹலால் இறைச்சிக் கடை வியாபாரியான தௌசிப்பை மிரட்டியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹலால் இறைச்சி விற்பனை என்பது ‘பொருளாதார ஜிகாத்’ – பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சர்ச்சை கருத்து

“பஜ்ரங் தள் உறுப்பினர்கள் என்னிடம் இறைச்சிக் கடையில் ஹலால் அல்லாத இறைச்சியை விற்க வேண்டும் என்று கூறினார்கள். நான் அவர்களிடம் இப்போது ஹலால் அல்லாத இறைச்சி இல்லை, பிறகு அதை ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினேன். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் என்னைச் சரமாரியாகத் தாக்கினார்கள்” என்று தௌசிப் தெரிவித்துள்ளார்.

இதே பத்ராவதி நகரில் ‘ஹலால் அல்லாத’ இறைச்சியை வழங்கக் கூறி, உணவக உரிமையாளர் ஒருவரை மிரட்டியதாகவும் துன்புறுத்தியதாகவும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்