ஜம்மு&காஷ்மீரின் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்களில், ஐந்து அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான குப்கர் கூட்டணி பின்னடைவை எதிர்கொண்டுள்ளதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.
ஓரணியில் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் – மாவட்ட கவுன்சில் தேர்தலில் போட்டி
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்களில், 20 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 280 இடங்களில் 110 இடங்களில் குப்கர் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஆனால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 10 மாவட்டங்களில் 9-ல் தலைமை பதவியை வெல்வதற்கான எண்ணிக்கை இருந்தாலும், 4 மாவட்டங்களை மட்டுமாவது தக்க வைத்துக் கொள்ள குப்கர் கூட்டணி திணறி வருகிறது.
ஜம்மு & காஷ்மீர் தேர்தல் – ” அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்தை, மக்கள் நிராகரித்தனர் “
ஷோப்பியன், ஶ்ரீநகர் மாவட்டங்களில் குப்கர் கூட்டணி ஜம்மு&காஷ்மீர் அப்னி கட்சியிடம் தலைவர் பதவியை இழந்துள்ளது. புத்கமில் ஒரு சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். குப்வாரா மாவட்டத்தில் மக்கள் மாநாடு கட்சி வெற்றி பெற்றுள்ளது. குல்கம் மாவட்டத்தில் மட்டுமே குப்கர் கூட்டணி இதுவரை வெற்றி பெற்றுள்ளது. மற்ற மாவட்டங்களில் வரும் வாரங்களில் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.
புத்கமில் மக்கள் ஜனநாயகக் கட்சியை விட்டு வெளியேறி, குப்கர் கூட்டணி வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் நசீர் அகமது கான், 14 வாக்குகளில் 10 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளரும் நசீர் அகமது கான் இருவரும் தலா 7 வாக்குகள் பெற்றனர். அதைத் தொடர்ந்து சீட்டுக் குலுக்கிப் போட்டு நசீர் அகமது கான் வெற்றி பெற்றதாக தீர்மானிக்கப்பட்டது என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் – ” மாவட்ட கவுன்சிலர்களிடம் பாஜக குதிரை பேரம் “
வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் சஜ்ஜத் லோன் தலைமையிலான மக்கள் மாநாடுக் கட்சியைச் சேர்ந்த இர்ஃபான் பந்திபுரி தலைவர் பதவியை வென்றுள்ளார். மக்கள் மாநாடுக் கட்சி சமீபத்தில் குப்கர் கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. 5 இடங்களை பெற்றிருந்த மக்கள் மாநாடு கட்சி வேட்பாளர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜக பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள, ஜம்மு பகுதியில் உள்ள தோதா, உதம்பூர் மாவட்டங்களில் தலைவர் பதவியை வென்றுள்ளதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.
பாஜகவினரும் கூட்டணி கட்சியினரும் “தேர்தல்களின் எல்லா நெறிமுறைகளையும் வெட்கமின்றி” மீறுவதாக தேசிய மாநாட்டுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
“ஆளும் கட்சிக்கும் அதன் அடிவருடிகளுக்கும் சாதகமாக நடந்து கொள்வதற்காக நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவது, ஒட்டு மொத்த நிகழ்முறையின் சார்புத் தன்மை பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்களில் வெற்றி பெற முடியாத இந்தக் கட்சிகள், பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி தமக்குத் தேவையான எண்ணிக்கையை உருவாக்க முயற்சிக்கின்றனர்” என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இம்ராஜன் நபி தார் கூறியுள்ளார்.
“கட்சித் தாவல்களும், கட்சி மாறுவதும் இயல்பு நிலையாகி விட்டிருக்கிறது” என்று தார் குற்றம் சாட்டியுள்ளார்.
காஷ்மீரில் ஜனநாயகத்தை படுகொலை செய்யும் பாஜக : மெஹ்பூபா முஃப்தி கண்டனம்
பாரமுல்லா மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தலைவர் , துணைத் தலைவர் தேர்தல்களுக்கு போதுமான உறுப்பினர்கள் வராததால் அவை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.