Aran Sei

நிலத்தை அபகரிக்க உயர்சாதியினர் முயற்சி – எதிர்ப்பு தெரிவித்ததால் கொல்லப்பட்ட தலித் செயல்பாட்டாளர்

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தித்திற்குட்டப்பட்ட, சனோதர் கிராமத்தில் அம்ராபாய் போரிச்சா என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த, தகவல் அறியும் உரிமைசட்ட (RTI) செயல்பாட்டாளர், உயர்சாதியினரால் கொடூரமாக ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது தந்தையை காக்க முயன்ற அவரது மகள் நிர்மலாவும் தாக்கபட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

’குஜராத்துக்கு ஒரு நீதி, தமிழ்நாட்டிற்கு ஒரு நீதி: தென்னிந்தியாவை துயரத்தில் ஆழ்த்தும் கூடங்குளம்’ – எம்.எச்.ஜவாஹிருல்லா

இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள அம்ராபாய் போரிச்சாவின் மகள் நிர்மலா, “நேற்று (மார்ச் 2) மாலை 4.30 மணியளவில் நானும் தந்தையும் எங்கள் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தோம். அப்போது அந்த வழியாக  எங்கள் கிராமத்தை சேர்ந்த தார்பார் (சத்ரிய) சாதியைச் சார்ந்த  முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்கள் சத்தமாக பாடலை ஒலிக்கவிட்டபடி சென்றுகொண்டிருந்தார்கள். பின் சில மணி நேரம் கழித்து, கைகளில் கற்கள், ஈட்டி, கத்தி, இரும்புக்குழாய் ஆகிய ஆயுதங்களோடு எங்கள் வீட்டிருக்கு வந்த என் தந்தையை கொடூரமாக தாக்கினர். அப்போது தடுக்க முயன்ற என் மீதும் காயங்கள் ஏற்பட்டது. ஏற்கனவே 2013ல் இதே போல் தாக்கப்பட்டு என் தந்தையின் காலில் முறிவும் ஏற்பட்டிருந்தது” என்று கூறியுள்ளார் என, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இந்தப் பொற்கால ஆட்சியில் மதமாற்றத்திற்கு எதிரான சட்டங்கள் இயற்றப்படும்’ – குஜராத் முதல்வர் விஜய் ருபனி

இது குறித்து பேசியுள்ள நவசார்ஜன் என்கிற தலித்துகளுக்கான தன்னர்வ தொண்டு நிறுவனத்தின் பணியாளர் அரவிந்த் மக்வானா, அம்ராபாய் போரிச்சா ஒரு விவசாயி எனவும் கடந்த மாதம் அவரது விவசாய நிலத்தை தார்பார் சாதியை சேர்ந்த சிலர் அபகரிக்க முயன்றதாகவும், இது குறித்து அம்ராபாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் ஆனால் அவரது புகார் மனுவை காவல் கண்காணிப்பாளர் பி.ஆர்.சோலங்கி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றும் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  இதன் காரணமாக அம்ராபாய் நீதி மன்றத்தை நாடினார் என்று மக்வானா தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

குஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை

மேலும், அம்ராபாயின் மரணம் குறித்து இரவு 10.30 மணி வரை கோஹா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யபடவில்லை என்றும், தொலைபேசி வழியே பாவ்நகர் காவல் கண்காணிப்பாளரையும் ,துணை கண்காணிப்பாளரையும் அழைத்தபோது பதிலளிக்கவில்லை என்றும் மக்வானா கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்