Aran Sei

மத்திய அரசின் தனியார்மய நடவடிக்கை – ” ஒடிசா இரும்பு ஆலை நிறுவன விற்பனை இரண்டாம் கட்டத்தை அடைந்தது “

image credit : business-standard.com

டிசாவின் கலிங்காநகரில் இரும்பு ஆலையை கொண்டுள்ள நீலாச்சல் இஸ்பத் நிகம் நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான முயற்சியில், ஆர்வம் தெரிவித்து பல விருப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று முதலீடு மற்றும் பொதுச் சொத்துகள் மேலாண்மை துறையின் செயலர் துகின் கந்தா பாண்டே கூறியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2021: இந்தியாவின் சொத்துக்கள் முதலாளிகளிடம் விற்கப்பட இருக்கிறது – ராகுல் காந்தி

நீலாச்சல் இஸ்பத் நிகம் நிறுவனத்தின் சொத்துக்களை விற்பதற்கான ஆர்வம் கோரும் அறிவிப்பை முதலீடு மற்றம் பொதுச்சொத்துகள் மேலாண்மை துறை ஜனவரி மாதம் வெளியிட்டிருந்தது. ஆர்வத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 29 (கடந்த திங்கள்) ஆகும்.

இந்நிறுவனம் இரும்பு பொருட்களை உற்பத்தி செய்து இந்திய வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்தின் உருக்கு ஆலை ஒடிசா மாநிலத்தின் ஜய்பூர் மாவட்டத்தின் கலிங்காநகரில் அமைந்துள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 11 லட்சம் டன் இரும்பு உருக்கு பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

கலிங்கா நகரில் நீலாச்சல் நிறுவனத்தின் ஆலையுடன் கூடவே டாடா உருக்கு ஆலை, ஜிண்டால் உருக்கு ஆலை ஆகியவையும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் சொத்துக்களை விற்பது அல்லது தனியார்மயமாக்குவதுதான் சிறந்த கொள்கை – நரேந்திர மோடி

இத்துடன் நீலாச்சல் இஸ்பத் நிகம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கான முயற்சி இரண்டாவது கட்டத்தை அடைந்து விட்டது என்று துகின் கந்தா பாண்டே கூறியுள்ளார்.

நீலாச்சல் நிறுவனம் எம்எம்டிசி – 49.78%, என்எம்டிசி – 10.10%, ஐபிஐசிஓஎல் (12%), ஓஎம்சி (20.47%) உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்.

ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம், பவன் ஹன்ஸ், பிஈஎம்எல், ஷிப்பிங் நிறுவனம் ஆகியவற்றின் தனியார் மய முயற்சியும் இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது. அந்நிறுவனங்களை வாங்குவதற்கும் பல விருப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று மத்திய அரசு கூறியுள்ளது.

“சோசியலிசம் என்பது சுமை; பொதுத்துறை நிறுவனங்களை விற்பதே எங்கள் நோக்கம்” – நிர்மலா சீதாராமன்

2021-22 நிதியாண்டில் மத்திய அரசு ரூ 1.75 லட்சம் கோடி தனியார்மய இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த நிதியாண்டில் இலக்கு ரூ 32,000 கோடியாக உள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்