Aran Sei

“அரசு தனக்குத்தானே பேசிக்கொள்வதை நிறுத்த வேண்டும்” – விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்

நேற்று முன் தினம் (டிசம்பர் 23) விவசாயிகள் சங்கங்கள் மத்திய அரசின் பேச்சுவார்த்தையை நிராகரித்த நிலையில், நேற்று (டிசம்பர் 24) மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

பிரிவினையை தூண்டியதாக சீக்கியர் கைது – விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் நடவடிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சங்கங்களுக்கு விவசாயத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விவேக் அகர்வால் மூன்று பக்க கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், மத்திய அரசு எப்போதுமே திறந்த மனதுடனும், நேர்மையாகவும் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கங்களுடனும் விவாதித்து வருவதாகவும், இது குறித்து மேலும் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகளையும் அதற்கு வசதியான தேதி மற்றும் நேரத்தையும் வழங்க வேண்டும் என்று கோருவதாகவும் தி இந்து தெரிவித்துள்ளது.

‘நாங்கள் உங்களின் அரசியல் எதிரியல்ல; துன்பத்தில் உள்ள நாட்டு மக்கள்’ – போராடும் விவசாயிகள்

நேற்று முன்தினம் (டிசம்பர் 23), விவசாயிகள் சங்கங்களின் கூட்டு குழுவான சம்யுக்த கிசான் மோர்ச்சா, பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்ததற்கு பதிலளிக்கும் வகையில் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில், “இந்த மூன்று விவசாய சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை உடன் தொடர்புடையவை அல்ல என்றும் இது எந்த வகையிலும் பாதிக்காது. எனவே, இது தொடர்பாக வைக்கப்படும் எந்த புதிய கோரிக்கையையும் நியாப்படுத்த முடியாது. ஆனாலும், விவசாயிகள் சங்கங்கள் எழுப்பியுள்ள அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.” என்று அந்தக் கடிதத்தில் விளக்கப்பட்டுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

“பேச்சுவார்த்தையை அமித்ஷா திசை திருப்பினார்” – போராடும் விவசாயிகள் குற்றச்சாட்டு

அகில இந்திய விவசாயிகள் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலாளர் அவிக் ஷா தனது பேஸ்புக் பதிவில், விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

“அரசு தனக்குத்தானே பேசிக்கொள்வதை நிறுத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் வந்து பேச வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கங்கள் முன்வைத்த பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும். போராட்டத்தின் தன்மையையும் ஆழத்தையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அரசு சரியான முறையில் செயல்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

மாதவிடாய் குறித்த தவறான எண்ணம் – உடைத்தெறிந்த விவசாயிகள் போராட்டக்களம்

மேலும், “அலங்கார வார்த்தைகள் கூறி தப்பித்துக்கொள்ளும் காலம் போய்விட்டது. புத்திசாலித்தனமாகவும் தந்திரமாகவும் பேசி தப்பித்துக்கொள்ளும் நேரம் போய்விட்டது. வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தி, பிரச்சனையை மறைக்கும் காலம் ஓடிவிட்டது. இங்கே உண்மையான ஒரு சிக்கல் உள்ளது. எனவே, எங்களுக்கு உண்மையான தீர்வுகளே தேவை.” என்று அகில இந்திய விவசாயிகள் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலாளர் அவிக் ஷா வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்