துர்கா பூஜை திருவிழாவிற்கு ரூபாய் 200 தர கொடுக்க முடியாததால், கோண்ட் பழங்குடிகளைச் சேர்ந்த 14 குடும்பங்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக ஊர்காரர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பலகாட் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 14 குடும்பங்களும், ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், சில குடும்பங்கள் ரூபாய் 100 செலுத்த முன்வந்தும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்குத்திட்டை வன்கொடுமை: சமூக விழிப்புணர்வு மையம் விரிவான அறிக்கை
ரேஷன் பொருட்கள் மறுக்கப்பட்டதாலும், வேலை மறுக்கப்பட்டதாலும் அவர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுக, உள்ளூர் நிர்வாகம் இந்த பிரச்சினையைத் தீர்த்து வைத்துள்ளது என்று ‘தி வயர்’ தெரிவித்துள்ளது.
மேலும், நவம்பர் 3 ஆம் தேதி, துர்கா பூஜை கொண்டாட்டங்கள் முடிந்ததும் நடைப்பெற்ற கூட்டத்தில், 14 குடும்பங்களுடன் பேசவோ, அவர்களை போய் பார்க்கவோ கூடாது (பானி-தங்கா )என்று கிராம மக்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
” வழக்கை வாபஸ் பெற மாட்டோம் ” – சாதி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம்
அந்த குடும்பங்களுக்கு ரேஷன் வாங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவரும் அவர்களுக்குச் சிகிச்சையளிக்க மறுத்துள்ளார் என்று ‘தி வயர்’ கூறியுள்ளது.
“எங்கள் மோசமான பொருளாதார நிலைமையால் துர்கா பூஜை திருவிழாவிற்கு ரூபாய் 151-க்கு மேல், எங்களால் நன்கொடை செலுத்த முடியாது. அதற்கு சிலர் கூட்டாகச் சேர்ந்துக்கொண்டு, எங்களைச் சமூக ரீதியாக புறக்கணிக்குமாறு கிராம மக்களுக்கு அழுத்தம் கொடுத்தனர்.” என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த முன்சிங் மஸ்ராம் ’என்டிடிவி’யிடம் தெரிவித்துள்ளார்.
துரத்தும் சாதி ஆதிக்கம் – உயிர் பயத்தில் ஓடும் ஒரு குடும்பம்
“என் தந்தை வேலை செய்யும் கிடங்கில் மரக்கட்டைகள் கனமானவையாக இருக்கும். வழக்கமாகக் குழுக்களாக சேர்ந்துதான் அவற்றை எடுத்துச் செல்வார்கள். இப்போது யாரும் என் தந்தையை நெருங்குவதில்லை. தனியாக அவற்றை சுமக்கிறார்.” என்று பாதிக்கப்பட்ட தன் சிங் பார்தே தெரிவித்ததாக ‘தி வயர்’ குறிப்பிட்டுள்ளது.
`வன்கொடுமைக்கு ஆளான 12 வயது மகள்’ – நியாயம் கேட்கும் இருளர் தாய்
மற்றொரு கிராமவாசியான சாகன் சிங் என்பவர் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’சிடம் பேசும் போது, புறக்கணிக்கப்பட்ட குடும்பங்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றும், கிராமத்தில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், “எங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதையும், மற்றவர்களின் வயல்களில் வேலை செய்வதையும் தடை விதித்துள்ளார்கள்.”என்று கூறியுள்ளார்.
எஸ்சி, எஸ்டி சட்டம் – உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் – திருமாவளவன்
உடல்நிலை சரியில்லாத கணவர் உட்பட ஏழு பேரைக் கொண்ட குடும்பத்தை, ஒரே ஆளாக வேலை செய்து காப்பாற்றி வரும் லட்சுமி வாட்கடே என்ற பெண் ரூபாய் 100 செலுத்த முன்வந்தும், அதை மறுத்துள்ளார்கள்.
இதுகுறித்து அவர் கூறும் போது, “ஊரடங்கு அறிவித்த பிறகு, நாசிக்கிலிருந்து ஆறு நாட்கள் நடந்தே ஊருக்கு வந்தேன். 5 கிலோ ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் வரை எங்களிடம் பணம் இல்லை. பட்டினி தான் இருந்தது.” என்று கூறியுள்ளதாக ‘தி வயர்’ சுட்டிக்காட்டியுள்ளது.
திரிபுராவில் அகதிகள் எதிர்ப்பு – பாஜகவுடன் கைகோர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
“பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எங்களை அணுகியது. நாங்கள் கிராமத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினோம். இது தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தோம். இந்த விவகாரம் இப்போது தீர்க்கப்பட்டுள்ளது.” என்று கலெக்டர் தீபக் ஆர்யா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க தேர்தல் – குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக
“காவல் நிலைய பொறுப்பாளரும், அதிகாரிகளும் கிராம மக்களைச் சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த புறக்கணிப்பை நிறுத்தாவிட்டால், தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளதாக ‘தி வயர்’ தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.