Aran Sei

’கோட்சே’ பெயரில் கல்வி நிலையம் – ’இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை’ குறித்து கற்பிக்க இந்து மகாசபை திட்டம்

தேச தந்தை மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சே பெயரில், மத்தியப் பிரதேசத்தில் கல்வி நிலையம் ஒன்றை இந்து மகாசபை தொடங்கியுள்ளது.

நேற்று (ஜனவரி 10) மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில், நாதுராம் கோட்சேவின் பெயரில் நூலகத்துடன் கூடிய கல்வி நிலையத்தை மத்தியப் பிரதேச மாநில இந்து மகாசபை  தொடங்கியுள்ளது.

காந்தியாரும் “அந்த” ஐம்பத்தைந்து கோடியும் – திப்பு

இதுகுறித்து, இந்து மகா சபையின் செயற்பாட்டாளர் ஒருவர், “இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை குறித்து, இளைஞர்களுக்கு கல்வி கற்பிப்பதும் விழிப்புணர்வை பரப்புவதுமே இதன் அடிப்படை நோக்கமாகும். இங்கு மகாராணா பிரதாப் போன்ற வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.” என்று கூறியுள்ளார்.

“1947 ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னால் இருந்தது காங்கிரஸ் கட்சிதான் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. ஆகவே, வரும் தலைமுறையினருக்கு இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்து முழுமையான வரலாறு தெரியும்படி செய்யவேண்டும். அந்த வகையில் ‘நாதுராம் கோட்சே கியான்ஷாலா’ கல்வி நிலையம், இந்தியப் பிரிவினையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி, இளம் தலைமுறையினருக்கு கற்பிக்கும். அதற்கான நூலகமாகவும் இந்நிலையம் விளங்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

டீன்ஏஜர்கள் காந்தியை நெருங்குவது எப்படி? – கோ.கமலக்கண்ணன்

மேலும், இங்கு கற்பிக்கப்படும் கல்வியின் வழியாக குரு கோபிந்த் சிங். சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாராணா பிரதாப் மற்றும் இந்து மகாசபையின்  தேசிய துணைத் தலைவர் ஜெயவீர் பரத்வாஜ் போன்ற தேசியத் தலைவர்கள் பற்றிய தகவல்களும் சொல்லிக்கொடுக்கப்படும் என்று இந்து மகா சபையின் செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் ரமேஷ் நாய்டு, தனது ட்விட்டரில் கோட்சேவின் புகைப்படத்தைப் பதிவிட்டு, “நாதுராம் கோட்சேவின் நினைவு தினத்தன்று, அவருக்கு நன்றி செலுத்தித் தலை வணங்குகிறேன். பாரத நாட்டில் பிறந்த உண்மையான மற்றும் மிகச் சிறந்த தேச பக்தர் இவர்” என்று  தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்