Aran Sei

ஹரித்வாரில் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு பேச்சு – புலம்பெயர் இந்தியர்கள் கண்டனம்

ரித்வார் நடந்த இந்துத்துவ நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் படியான உரைகள் நிகழ்த்தப்பட்டது தொடர்பாக, புலம்பெயர் இந்தியர்களின் அமைப்புகள் கவலை தெரிவித்ததோடு, இனப்படுகொலையைத் தூண்டும் இவ்வெறுப்பு பேச்சிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் கோரியுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்காட்லாந்து, பின்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில், இந்து, இஸ்லாமிய, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புலம்பெயர் இந்தியர்களின் அமைப்புகள், ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்ச்சியின் வெறுப்பை உமிழும் உரைகள் குறித்து ட்விட்டரில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தின என்று 28 புலம்பெயர் இந்தியர்களின் அமைப்புகள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரித்வாரில் சிறுபான்மையினர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – மேலும் 10 பேர் மீது வழக்குப் பதிவு

இவ்வெறுப்புப் பேச்சிற்கு காரணமானவர்களைக் கைது செய்யத் தவறியதற்காக அரசை அவ்வறிக்கையில் விமர்சித்துள்ளனர்.

யதி நரசிங்கானந்த் மற்றும் தர்ம சன்சத் நிகழ்ச்சியில் பங்கேற்ற பேச்சாளர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்பதே உலகளாவிய இந்திய புலம்பெயர்ந்தோரின் பொதுவான கேரிக்கையாகும் என்று தங்களது அறிக்கையில் அவ்வமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

மனித உரிமைகளுக்கான இந்துக்கள், இந்திய இஸ்லாமியர்களின் சர்வதேச கவுன்சில், இந்தியா கூட்டணி- ஐரோப்பா, ஸ்டிச்சிங் லண்டன் கதை- ஐரோப்பா, தலித் ஒற்றுமை மன்றம்- அமெரிக்கா, இந்திய அமெரிக்க கிறிஸ்தவ அமைப்புகளின் கூட்டமைப்பு-அமெரிக்கா, இந்திய அமெரிக்கன் இஸ்லாமியர் கவுன்சில்-அமெரிக்கா போன்ற உலகளவில் உள்ள 28 அமைப்புகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்