Aran Sei

அப்ப கோ கொரோனா; இப்ப நோ கொரோனா – மத்திய அமைச்சரின் அடுத்த ஆயுதம்

“அப்போது ‘கோ கொரோனா’ என்று கோஷமிட்டேன். கொரோனா போய்விட்டது. இப்போது நோ கொரோனா என்று சொல்லுங்கள்” என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம், மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ராவில் இந்திய குடியரசு கட்சி தலைவரும் மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, பரவி வந்த கொரோனா தொற்றை ஒழிப்பதாக கூறி, ‘கோ கொரோனா, கொரோனா கோ’ என்று தன் தொண்டர்களுடன் சேர்ந்து முழங்கமிட்டார். இந்த வீடியோவும், அவரின் முழக்கமும் நாடு முழுவதும் பிரபலம் அடைந்தது.

இங்கிலாந்தில் அதிவேகமாக பரவும் புதியவகை கொரோனா – நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்

பிரிட்டனில் பரவி வரும் புதியவகை கொரோனா தொற்று உலகை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 27) புதிய வகை கொரோனா தொற்று குறித்து பேசி ராம்தாஸ் அத்வாலே, “அப்போது ‘கோ கொரோனா கொரோனா கோ’ என்று கூவினேன். கொரோனா தொற்று போய்விட்டது. தற்போது புதிய கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால், இப்போது ‘நோ கொரோனா, கொரோனா நோ’ என்று கோஷமிடுங்கள்.” என்று கூறியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

பரவும் புதிய வகை கொரோனா – தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

’கொரோனா கோ’ என்று முழங்கிய சில நாட்களிலேயே, ராம்தாஸ் அத்வாலேக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது  குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்