Aran Sei

‘பிசி, எம்பிசி ஏழை மாணவர்களுக்கும் முழு கல்விக் கட்டணம் இலவசம்’ – புதுவை முதல்வர் அறிவிப்பு

ஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கு முழுக் கல்விக் கட்டணத்தை புதுச்சேரி அரசு ஏற்பது போல், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கான முழுக் கல்வி கட்டணத்தையும் அரசு ஏற்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

நேற்று (ஜனவரி 6) புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியத்தில் சிஎஸ்ஐஆர் நிதியின் கீழ் டாக்டர் அம்பேத்கர் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுசார் மையத்தின் திறப்பு விழாவுக்கு புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை வகித்துள்ளார்.

பள்ளிக் கட்டணம் – கொரோனா முடக்கத்திலும் தனியார் பள்ளிகள் பிடிவாதம்

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் நாராயனசாமி, “சமீபத்தில் ஆதி திராவிடர், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு முழுக் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். இதே போன்று, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களின், பள்ளி மற்றும் கல்லூரி கல்விக் கட்டணத்தை புதுச்சேரி அரசு ஏற்கும்.” என்று அறிவித்துள்ளார்.

மேலும், இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்