Aran Sei

மேற்கு வங்க அமைச்சரவை கூட்டம் : கலந்து கொள்ளாத 4 அமைச்சர்கள்

டுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டிய அமைச்சரவைக் கூட்டத்தை நான்கு அமைச்சர்கள் கலந்துக்கொள்ளாதது பல ஊகங்களை எழுப்பியுள்ளது.

நேற்று (டிசம்பர் 22) திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு அமைச்சர்கள் பங்கேற்கவில்லை என்று தி இந்து தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பாஜக படுதோல்வியடையும் – பிரஷாந்த் கிஷோர் சவால்

சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்கத்தில் நடத்திய பேரணியின் போது, முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்காத அமைச்சர்களில் இருவர், மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதியை சேர்ந்த, சுற்றுலாத்துறை அமைச்சர் கவுதம் தேப் மற்றும் வட வங்கத்தின் வளர்ச்சித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் கோஷ் ஆவர்.

மேற்கு வங்கத்தில் பாஜக பேரணி – பங்கேற்கச் சென்ற தலைவர்களின் வாகனங்கள் மீது கல்வீச்சு

கல்கத்தாவிலிருந்து 600 கி.மீ தொலைவில் உள்ள வடக்கு வங்கத்தில் இருக்கும் இந்த அமைச்சர்கள், இக்கூட்டத்தில் பங்கேற்காதது புதிது இல்லை. காரணம், அவர்கள் கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் இருந்து அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று தி இந்து சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும், மற்ற இரண்டு அமைச்சர்கள், பிர்பூமைச் சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் சந்திரநாத் சின்ஹா மற்றும் ஹவுராவைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர்,  ராஜீப் பானர்ஜி ஆவர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமை சிலருக்கு மட்டும் சார்பாக செயல்படுவதாக ராஜீப் பானர்ஜி குற்றச்சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்தத் தலைவர்கள் அவரை சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர் என்று குறிப்பிட்டுள்ளது.

மேற்கு வங்க தேர்தல் – குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக

பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியும் இதை போல பல மாதங்கள் அமைச்சரவைக் கூட்டங்களை புறக்கணித்து வந்தார் என்பதால், இந்த அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக்கொள்ளாதது பல ஊகங்களை எழுப்பியுள்ளது என்று தி இந்து தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்