Aran Sei

முதல்முறையாகச் சிங்கு எல்லையில் நடைபெற்ற கலவரம் – விவசாயிகள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த காவல்துறை

வம்பர் 26 ஆம் தேதியிலிருந்து சிங்கு எல்லையில் நடைபெற்று வந்த போராட்டத்தில், முதல் முறையாக ஜனவரி 29 ஆம் தேதி கலவரம் வெடித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காவல்துறையின் தடுப்புகளை உடைந்த 200 நபர்கள், விவசாயிகள் போராட்டம் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பாகக் கூறியதோடு, விவசாயிகளின் கூடாரங்கள் மற்றும் தங்குமிடங்களை சேதப்படுத்தியதைக் காவல்துறையினர் பார்த்துகொண்டு இருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழவன் மகன் என எடப்பாடி பழனிசாமி நடிப்பதை விவசாயிகள் நம்பமாட்டார்கள் – வைகோ

சிங்கு  எல்லைக்கு அருகில் இருக்கும் கிராமம் ஒன்றை சேர்ந்த பாஜக கவுன்சிலரின் கணவர் உத்திரவிட்டதின் பெயரிலேயே, அந்தக் கும்பல் தங்களை தாக்கியதாக விவசாயிகள் குற்றம் சாட்டியதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறையினரை வாள் வைத்துத் தாக்கியதாகச் சொல்லப்படும் 22 வயதான ரஞ்ஜீத் சிங் உள்ளிட்ட 44 விவசாயிகளைக் காவல்துறையினர் கைது செய்ததாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவரின் உரை: ‘மோடி அரசின் தோல்விகளை மறைக்கும் பிரச்சார உரை’ – திருமாவளவன் விமர்சனம்

டெல்லி-ஹரியானா எல்லையில் குரு தேக் பகதூர் நினைவிடத்தின் அருகே பகல் 12 மணிக்கு, வருகை தந்த சிங்கு, நரேலா, பவானா, அலிப்பூர் மற்றும் குண்டலில் கிராமங்களைச் சேர்ந்த ஒரு குழுவினர், குடியரசு தினத்தன்று தேசிய கொடி அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, விவசாயிகள் அந்த இடத்தைக் காலி செய்ய அவர்கள் கோரினர் எனக் காவல்துறையினர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஒரு மணிநேரத்தில் காவல்துறை தடுப்புகளை கடந்த குழுவினர், இடத்தைக் காலி செய்யுமாறு கோரியதாகவும், பேச்சுவார்த்தை கலவரமாக மாறியதை அடுத்து காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தடியடி நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மதக்கலவரம் தொடர்பான 21 வழக்குகள் வாபஸ் – எம்பி, எம்எல்ஏக்கள் பரிந்துரையில் நடவடிக்கை

தடுப்புகள் அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏன் அனுமதிக்கப்பட்டனர் என்ற கேள்விக்குப் பதிலளித்த காவல்துறை உயரதிகாரி ”அவர்கள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள விரும்பியதால், அனுமதிக்கப்பட்டனர்” என இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்