Aran Sei

அசாம் என்.ஆர்.சி தடுப்பு முகாம்களில் ரேஷன் பொருட்கள் நிறுத்தம்

credit: indiatoday.in

அசாமில் அண்டை நாட்டில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் புலம்பெயர்ந்தவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாமில் ரேஷன் பொருட்கள் வழங்கல் நிறுத்தப்பட்டிருப்பதாக நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு (Citizens for Justice and Peace)  செய்தி வெளியிட்டுள்ளது.

அசாம் தடுப்பு முகாமின் நிலை பற்றிய வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், மூன்று ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டவர்களை நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுதலை செய்ய 2019-ம் ஆண்டு மே மாதம் உத்தரவு பிறப்பித்தது.

உச்சநீதி மன்றம் இந்த வழக்கை விசாரித்த நேரத்தில், மொத்தம் 1,136 நபர்கள் அசாமின் ஆறு தடுப்பு முகாம்களில் இருந்தனர் என்றும் அவர்களில் 376 நபர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தடுப்பு முகாமில் இருந்து வருகின்றனர் என்றும் குறிப்பிடும் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு, உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகான ஒன்பது மாதங்களில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட 500 நபர்கள் புதிதாக தடுப்பு முகாம்களுக்கு வந்து சேர்ந்துள்ளனர் கூறுகிறது.

உச்சநீதி மன்ற தீர்ப்புக்குப் பிறகும் கூட தடுப்பு முகாமில் உள்ள சரிபாதியினர் இன்னமும் விடுதலை செய்யபடவில்லை என்கிறது சுட்டிக்காட்டும் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு . இதற்கு அசாம் உள்துறை அமைச்சகம், தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டர்களின் பிணை விண்ணப்பங்களை அடியோடு நிராகரித்து விடுவது அல்லது நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துவது காரணமாக இருப்பதை அவ்வமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

விடுதலை பெறுவதற்கான முயற்சிகளை விரைவாக எடுக்கும்படி தடுப்பு முகாமில் உள்ளவர்கள் மீது முகாம் கண்காணிப்பாளர் அழுத்தம் தருவதாகவும்  புதிதாக முகாம்களுக்கு வருகின்றவர்களுக்கும் உணவு வழங்குவதற்காக ஏற்கெனவே தடுப்பு முகாம்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த உணவு சரிபாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை சட்டபடி விடுதலை செய்ய வேண்டும். எனவே, அவர்களுக்கு வழங்க வேண்டிய உணவுகளை (சட்டத்துக்கு புறம்பாக) அரசாங்கம் நிறுத்தியுள்ளது என்றும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களுக்கு மனித நேய அடிப்படையில் முகாம் கண்கானிப்பாளர் வழங்குகிறார் என்றும் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு கூறுகிறது.

அசாம் உள்துறை அமைச்சம் ஒரு புறம் தடுப்பு முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்ய அனுமதிக்காத நிலையில் மறுபுறம் முகாமில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த உணவுப் பொருட்களை நிறுத்தியுள்ளது ஏன் என்ற முக்கியமான கேள்வியை நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு கேட்கிறது..

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்