Aran Sei

‘சுல்லி டீல்ஸ்’: இணையத்தில் பதிவேற்றப்படும் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் – பெண் பத்திரிகையாளர் புகார்

நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ள பெண் பத்திரிகையாளர் ஒருவர், இந்த வெட்கக்கேடான செயலுக்குப் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இஸ்லாமிய பெண்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடன், என்னுடைய புகைப்படத்தை தவறாக சித்தரித்து இணையதளத்தில் பதிவேற்றியுள்ளதாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லியைச் சேர்ந்த அப்பெண் பத்திரிகையாளர் அளித்துள்ளார்.

ஆக்ஸ்பாம் இந்தியா உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெறுவது நிறுத்திவைப்பு – ஒன்றிய அரசு தகவல்

சில மாதங்களுக்கு முன்பு, பல இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் ‘புல்லி பாய்’ என்ற செயலியில் அடையாளம் தெரியாத நபர்களால் பதிவேற்றப்பட்டுள்ளது.  இதில், ‘இப்பெண்கள் விற்பனைக்கு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சுல்லி’ அல்லது ‘சுல்லா’ என்பது இஸ்லாமியர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் இழிவான சொல்.

இதுதொடர்பாக, தெற்கு டெல்லியின் சிஆர் பார்க் காவல் நிலையத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட இப்புகாரின் நகலை அப்பெண் பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தன்னுடைய ட்விட்டர் பதிவில், “என்னுடைய புகைப்படத்தை மாற்றம் செய்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இது இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்யும் செயல். புல்லி பாய் என்ற இணையதளத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. என்னை மட்டுமல்ல பல பெண்களையும் இதுபோன்று சித்தரித்துள்ளனர். இந்த இணையதளமே இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஜி.எஸ்.டி வசூல் டிசம்பரில் 1.3 லட்சம் கோடியாக உயர்வு – தமிழ்நாட்டில் 4% வருவாய் குறைவு

இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாசுதீன் ஒவைசி, “இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்வது வேதனை தருகிறது. ஆனால், இச்செயலுக்கு அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஒன்றிய அரசின் தகவல் தொழிற்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், டெல்லி காவல்துறை, டெல்லி மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சிவசேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, அந்த செயலி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மும்பை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் பதிவில், “மும்பை காவல்துறை ஆணையர், டிசிபி குற்றவியல் ராஷ்மி கரன்திகர் ஆகியோரிடம் இஸ்லாமிய பெண்களை ஏலம் விடும் செயலி குறித்துப் பேசினேன். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்கள். மகாராஷ்டிரா காவல் டிஜிபியும் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறேன். இந்த பாலியல் மற்றும் பெண் வெறுப்பு இணையத்தை நடத்துவோர் கைது செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “மரியாதைக்குரிய ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தளத்தின் வழியாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்களை அவதூறு செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இப்புகார் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது வேதனைக்குரியது” என்று கூறியுள்ளார்.

Source: PTI, The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்