Aran Sei

விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் ? – ராகுல் காந்தி கேள்வி

விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை, நரேந்திர மோடி அரசு ஏற்றுக்கொள்ள இன்னும் எத்தனை விவசாயிகள் இறக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கடந்த 17 நாட்களில், தில்லி-ஹரியானா எல்லையான சிங்குவில் போராட்டம் தொடங்கியதில் இருந்து, 11 விவசாயிகள் இறந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் தொடரும் போராட்டம் – 12 விவசாயிகள் பலி

இதுகுறித்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிந்துள்ளார். அதில், “விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதற்கு, எங்கள் விவசாயி சகோதரர்களிடமிருந்து இன்னும் எத்தனை உயிர் தியாகங்கள் தேவைப்படும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கடந்த 17 நாட்களில் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் 11 விவசாயிகள் இறந்ததாகக் கூறும் செய்தித்தாளின் புகைப்படங்களையும் அதில் இணைத்துள்ளார்.

”போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, மாஃபியாக்கள்” – தமிழக பாஜக

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த விவசாயப் போராட்டத்தின் போது பலர் இறந்துள்ள போதிலும், விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்க மோடி அரசு மறுத்து வருகிறது.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இத்தனை விவசாயிகள் இறந்த போதிலும், மோடி அரசாங்கம் ‘அன்னதாதா’வுக்கு (விவசாயிகள்) பதிலாக, அதன் கட்சியின்  ‘தண்டதா’களுடன் (நன்கொடையாளர்கள்) நிற்கிறது என்று கண்டித்துள்ளார்.

 

மற்றொரு ட்வீட்டில்,”மோடி ஜி, உங்கள் எதேச்சதிகாரத்திற்கு ஜனநாயகத்தில் இடமில்லை. மாற்றுக்கருத்துள்ள ஒவ்வொருவரையும் மாவோயிஸ்ட் என்றும் தேச துரோகி என்றும் அறிவிப்பதுதான் உங்களுக்கும் உங்கள் அமைச்சர்களுக்கும் இருக்கும் கொள்கை.  குளிருக்கும் மழைக்கும் மத்தியில் போராட்டத்தில் அமர்ந்திருக்கும் ‘அன்னதாதா’களிடம் (விவசாயி) மன்னிப்புக் கேட்டுக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். ”என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்