Aran Sei

இணையத்திலும் வலுக்கும் விவசாயிகள் போராட்டம் – புலம்பெயர் இந்தியர்கள் ஆதரவு

credits : the wire

மத்திய அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் கடந்த 13 நாட்களாக நடைபெற்றுவருகிறது. நேற்று, நாடு முழுவதும் பாரத் பந்த் என்று விவசாயச் சங்கங்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய நிலையில், லட்சக்கணக்கான குடிமக்கள், குறிப்பாகப் புலம்பெயர்ந்த பஞ்சாபியர்கள், இணையத்தில்  விவசாயிகளுக்குத் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பல செய்திகள் இருந்தாலும், சட்டங்களை ரத்து செய்யக் கோரி இணையவாசிகளை ஒன்றிணைக்கக் கூடிய 120 டிஜிட்டல் மனுக்கள் இணையத்தில் உள்ளன. இந்த மனுக்கள் லண்டன், கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய மக்களால் தொடங்கப்பட்டுள்ளன.

டெல்லி எல்லையில் விவசாயிகள் முகாமிடத் தொடங்கியதிலிருந்து, 3,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் இத்தகைய மனுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். பஞ்சாபியர்கள் மட்டுமன்றிப் புலம்பெயர்ந்த இந்தியர்களின் ஆதரவும் போராட்டத்திற்குக் கிடைத்துள்ளதை இது பிரதிபலிக்கிறது.

இந்த மனுக்களில் பல வெளிநாடுகளில் வசிக்கும் சீக்கிய இந்தியர்களால் தொடங்கப்பட்டாலும், இன்னும் பல சமூகங்கள் தங்கள் ஆதரவைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

“இவற்றில் மிகப்பெரிய மனு அமெரிக்க சீக்கிய கவுன்சிலால் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் 50,000 க்கும் மேற்பட்டோர் அதில் கையொப்பமிட்டுள்ளனர். இதேபோல், இங்கிலாந்தில் வசிக்கும் பிரப்ஜோத் பாத் அளித்த மனுவில் 50,000 பேரின் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன ”என்று சேஞ்ச்.ஆர்ஜ் இணையதளத்தின் அதிகாரி கூறியுள்ளார்.

இந்தியாவில் ஏறக்குறைய 128 ஆயுதப்படை வீரர்கள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயச் சட்டங்களுக்கு எதிராக அமைதியாகப் போராடி வரும் விவசாயிகளுக்கு  நிபந்தனையற்ற ஒரு மனதான ஆதரவை அளித்துள்ளனர் என தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சில சங்கங்களிடம் மட்டும் பேச்சுவார்த்தை – விவசாயிகள் ஒற்றுமையை குலைக்க திட்டம்

“அமைதியாகப் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்; அவர்களுடன் ஒத்துழைப்போம்; அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறோம்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் : கைக்கோர்த்த லாரி உரிமையாளர்கள் சங்கம்

விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதன்மைச் சட்டம் இயற்றுவதற்கு முன்னர் முதன்மை பங்குதாரர்களான விவசாயிகளுடன் எவ்வித முன் ஆலோசனையும் நடைபெறாததால் இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கடந்த நவம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் விவசாயிகள் டெல்லியை நோக்கிப் பயணிக்கும் போது கண்ணீர்ப்புகை குண்டு மற்றும் நீர் பீரங்கிகளை காவல்துறை பயன்படுத்தியதற்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

போராடும் விவசாயிகள் மத்தியில் ஒரு நாள் – வீடியோ

”நாங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஆதரிப்பதற்கும் உயர்த்தி பிடிப்பதற்கும் நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம். எனவே, அமைதியான எதிர்ப்பிற்கும் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கும் தோளோடு தோள் நிற்போம்” எனக் கூறியுள்ளனர். ஆயுதப்படையில் பணியாற்றுபவர்களில் 80 சதவீதம் பேர் விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் எனவும் கூறியுள்ளனர். இந்த அறிக்கையில் 128 முன்னாள் ஆயுதப்படை அதிகாரிகள் கையொப்பமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்