Aran Sei

‘நாங்கள் உங்களின் அரசியல் எதிரியல்ல; துன்பத்தில் உள்ள நாட்டு மக்கள்’ – போராடும் விவசாயிகள்

மூன்று விவசாய சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கான மத்திய அரசின் அழைப்பை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கங்களின் குழுவான சம்யுக்த கிசான் மோர்ச்சா நிராகரித்துள்ளது.

“நாங்கள் விவசாய சட்டங்களை ரத்து செய்ய கோருகிறோமே தவிர திருத்தங்களை அல்ல” என்றும் “பேச்சுவார்த்தையை திறந்த மனதுடனும் நல்ல நோக்கங்களுடனும் நடத்த மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும்” என்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

“பேச்சுவார்த்தையை அமித்ஷா திசை திருப்பினார்” – போராடும் விவசாயிகள் குற்றச்சாட்டு

நேற்று (டிசம்பர் 23) ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர் யோகேந்திர யாதவ், பத்திரிகையாளர் சந்திப்பில் மோர்ச்சாவிலிருந்து மத்திய அரசிற்கு எழுதிய கடிதத்தை வாசித்துள்ளார்.

கடிதத்தில், விவசாயிகள் சங்கங்கள் மூன்று சட்டங்களையும் ரத்து செய்யுமாறு கோரியுள்ள நிலையில், “அச்சட்டங்களின் அடிப்படை நோக்கங்கள் மற்றும் கொள்கை குறித்து நாங்கள் எழுப்பிய கேள்விகளை, திருத்தங்களுக்கான கோரிக்கையாக மத்திய அரசு திரிக்க முயல்கிறது” என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – முடங்கியது டெல்லி – மீரட் அதிவிரைவு சாலை

விவசாய துறை இணைச் செயலாளரும், பிரதமர்-கிசான் தலைமை நிர்வாக அதிகாரியுமான விவேக் அகர்வாலுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தில், “மூன்று சட்டங்களை ஏற்கப் போவதில்லை” என்று பல சுற்று பேச்சுவார்த்தைகளின் போது மத்திய அரசிடம் விவசாய சங்கங்கள் தெளிவுபடுத்தியுள்ளன என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“திறந்த இதயத்துடனும் திறந்த மனதுடனும் நல்ல நோக்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வந்தால், அதில் பங்கேற்க நாங்கள் தயாராகவுள்ளோம். அர்த்தமற்ற சட்டத் திருத்தங்களையும் பலமுறை நிராகரிக்கப்பட்ட முன்மொழிவுகளையும் மீண்டும் மீண்டும் எங்களிடம் கொண்டு வருவதற்கு பதிலாக, ஒரு உறுதியான முன்மொழிவை எழுத்துபூர்வமாக எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.” என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் : பகுதி பகுதியாக நடைபெறும் உண்ணாவிரதம்

மேலும், “விவசாய அமைச்சகத்தின் கடிதத்தின் வழியாக விவசாயிகளின் போராட்டத்தை, முன்பு அவதூறு செய்தது போலவே இப்போதும் மத்திய அரசின் அவதூறு செய்கிறது. அரசு விவசாயிகளை தங்களின் அரசியல் எதிரிகளைப் போல கையாள்கிறது. எங்களை துன்பத்தில் உள்ள  நாட்டு மக்களின் ஒரு குழுவாக பார்க்கவில்லை. போராட்டத்தில் உள்ள விவசாயிகள் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், வெறுமனே தங்களை விவசாயிகள் சங்க தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதென்பது, இந்த போராட்டத்தை தகர்த்தெறியும் முயற்சியாகும்.” என்று அக்கடிதம் விமர்சித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்