Aran Sei

விவசாயிகள் போராட்டம் – அம்பாலா, கர்னால் சுங்கச் சாவடிகள் மூடப்பட்டன

Imag Credit - indiatoday.in

மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களையும், மின்சார திருத்த மசோதாவையும் எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் இன்று நாடு முழுவதிலும் நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை தடுக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.

தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கம் – சுங்கச் சாவடிகள் முற்றுகை – விவசாயிகள் போரட்டம் இன்று

அதன்படி, அம்பாலாவில் உள்ள ஷம்பு சுங்கச் சாவடியை விவசாயிகள் மூடி விட்டனர். வாகனங்கள் கட்டணம் செலுத்தாமலேயே செல்லும் வீடியோவை ANI செய்தி நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

மேலும், ஹரியானாவின் கர்னாலில் உள்ள பஸ்தாரா சுங்கச் சாவடியை நேற்று இரவே போராடும் விவசாயிகள் மூடி விட்டதாகவும் ANI தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

சுங்கச் சாவடியை மூடி வாகனங்களை கட்டணம் செலுத்தாமல் போக அனுமதிக்கும் போராட்டக் காரர்கள் “கிசான் ஏக்தா, ஜிந்தாபாத்” (விவசாயிகள் ஒற்றுமை, ஓங்குக) என்று முழக்கமிடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

” எல்லாவற்றையும் பேசித் தீர்த்துக்கலாம் ” – அரசு, ” மூன்று சட்டங்களையும் ரத்து செய்க” – விவசாயிகள்

உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

கடும் குளிரிலும் தொடரும் விவசாயிகள் போராட்டம் – பேச்சுவார்த்தை நடக்குமா?

விவசாயிகளின் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முடக்குவது என்ற விவசாயிகளின் திட்டத்தைத் தொடர்ந்து, உத்தர பிரதேசத்தில் உள்ள 130 சுங்கச் சாவடிகளிலும் பாதுகாப்பு வலுப்படுத்துள்ளது என்றும், அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் சுங்கச் சாவடிகளின் பாதுகாப்பை உறுதி செய்யப்படும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் இந்தியா டுடே செய்தி கூறுகிறது. தீயணைப்பு படைகளும், உளவுத்துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

’அம்பானி, அதானியை புறக்கணிப்போம்’ – விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டர் ட்ரெண்டிங்

கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த 2 வாரங்களாக டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அவர்கள், மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்காததைத் தொடர்ந்து தமது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு அளித்த திட்ட வரைவில் இருந்தது என்ன? – விரிவான விளக்கம்

5 சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் அரசு, மீண்டும் சட்டங்களில் மேலோட்டமான திருத்தங்களை மட்டும் செய்ய முன் வருகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

போராடும் விவசாயிகள் மத்தியில் ஒரு நாள் – வீடியோ

இந்த விவசாய சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானவை, கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கானவை என்று விவசாய நிபுணர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கான சட்டமல்ல, முதலாளிகளுக்கான சட்டம் : ஜெயரஞ்சன் – வீடியோ

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்