Aran Sei

அரசுக்கு ஆதரவாக மாறிய விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் – போராட்டத்தில் முரண்பாடு

த்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய கோருவதற்கு பதிலாக குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயப்பதிற்கான சட்டம் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறிய அகில இந்திய விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழுவின் (ஏஐகேசிசி) தேசிய ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சிங்கை ஏஐகேசிசி பதவியிலிருந்து அகற்றியுள்ளது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் ஆரம்பித்து 19 நாட்களுக்குள்ளாகவே விவசாயிகள் இடையே மூன்று குழுக்கள் உருவாகியுள்ளது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரும் சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற முடியாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. வேளாண் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள மட்டுமே அரசு தயாராக இருக்கிறது.

விவசாயிகள் விஷம் குடித்தால் கவலையில்லை, பீட்சா சாப்பிடுவது செய்தியா?

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கரும்பு மற்றும் நெல் விவசாயிகளின் அமைப்பை வழிநடத்தும் வி.எம்.சிங் மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் எனும் கோரிக்கையை கைவிட்டு, விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்க சட்டம் இயற்றுமாறு மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். உத்தர பிரதேச விவசாயிகளின் பிரதிநிதியாக அரசாங்கத்தை சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வி.எம்.சிங் ”குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் அமலுக்கு வந்தால், இந்த மூன்று சட்டங்களும் பயனற்றதாக மாறிவிடும். இது தான் எங்கள் உண்மையான கோரிக்கை. மற்ற அமைப்புகள் தங்கள் உண்மையான கோரிக்கைகளிலிருந்து விலகிவிட்டன” என்று கூறியுள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம் – தலைவர்கள் 9 மணி நேரம் உண்ணாவிரதம்

2017-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகில இந்திய விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் (ஏஐகேசிசி) கீழ் 250 சங்கங்கள் உள்ளன. கடந்த மாதம் முதலே இந்த குழுவில் இருக்கும் விவசாய சங்க தலைவர்களுடன் சிங் முரண்பட்டே வந்துள்ளார்.

டெல்லி சலோ பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்னதாக விவசாயிகளை தலைநகருக்கு அழைக்காமல், கொரோனா தொற்று காரணமாக வீட்டிலிருந்தே சிங் போராட வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கம் – சுங்கச் சாவடிகள் முற்றுகை – விவசாயிகள் போரட்டம் இன்று

டெல்லியின் சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏஐகேசிசி தலைவர்கள், சிங் கூறிய கருத்திற்கு உடன்படாமல் அவரை தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து அகற்றியுள்ளனர்.

“மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதே எங்களது முதன்மையான கோரிக்கை ஏனெனில் அந்தச் சட்டம் விவசாயத்தை அழித்து விடும். எங்கள் இரண்டாவது கோரிக்கை குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதச் சட்டத்திற்கானது. அதற்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்” என்று ஏஐகேசிசி குழுவின் ஒரு தலைவரான ஹன்னன் மொல்லா கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் குறித்த பிரதமரின் உளறல் தேசத்திற்கே அவமானம் – இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்

“போராடும் விவசாயிகள் இடையே பிளவுகளை உருவாக்கி அரசு போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறது. இந்தப் போராட்டத்தில் சிங் இடையூறு ஏற்படுத்தி விவசாயிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க முயல்கிறார், எனவே நாங்கள் அவரை அகற்றியுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்