Aran Sei

’விவசாயிகளின் ட்ராக்டர் பேரணிக்கு இன்று ட்ரைலர்’ – டெல்லி நெடுஞ்சாலைகளில் குவிந்த விவசாயிகள்

டெல்லியைச் சுற்றியுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில், விவசாய சங்கங்கள் நடத்தவுள்ள டிராக்டர் பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கவுள்ளனர்.

ஜனவரி 26 ஆம் தேதிக்குள் மூன்று விவசாயச் சட்டங்களும் திரும்ப பெறப்படவில்லை எனில், குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் இடத்திற்கு இந்தியா முழுமையிலும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ட்ராக்டரில் வருகை புரிவார்கள் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

‘சும்மா இது ட்ரைலர் தான்ம்மா’ – செங்கோட்டை நோக்கி ட்ராக்டரில் படையெடுக்கும் பெண்கள்

இந்நிலையில், இன்று (ஜனவரி 7) டெல்லியைச் சுற்றியுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் நடக்கவுள்ள ட்ராக்டர் பேரணியானது, குடியரசு தின பேரணிக்கான ஒத்திகை போலவும், அடுத்து எட்டாவது கட்டமாக மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடக்கவுள்ள நிலையில், மீண்டும் தங்கள் பலத்தை காட்டும் விதமாகவும் இருக்கும் என்று விவசாயிகள் சங்கங்கள் கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

இந்தப் பேரணியானது ஐந்து வெவ்வேறு இடங்களிலிருந்து, ஐந்து குழுக்களுடன் காலை 11 மணிக்கு தொடங்கும் என்று விவசாயிகள் சங்கங்களின் முன்னணியான சம்யுக்ட் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பு – ராணுவ அணிவகுப்பிற்கு இணையாக விவசாயிகள் நடத்த முடிவு

மேலும், ”ஒரு விவசாயிகள் குழு சிங்கு எல்லையிலிருந்து திக்ரி எல்லையை நோக்கி செல்லும், மற்றொரு குழு திக்ரியிலிருந்து குண்ட்லி நோக்கி எதிர் திசையில் செல்லும், இக்குழுக்கள் சம்ப்லாவிற்கும் குண்ட்லிக்கும் இடையிலான நடுப்பகுதியில் சந்திப்பார்கள். அதைத்தொடர்ந்து, அங்கு ஒரு பேரணியை நடத்துவார்கள். பின்னர் தொடங்கிய இடத்திற்கு திரும்புவார்கள். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், பெரும்பாலும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் இப்போது உள்ளனர்.” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

“மறுபுறத்தில் மூன்றாவது குழு காசிப்பூரிலிருந்து தொடங்கி பல்வால் நோக்கிச் சென்று, தஸ்னாவில் உள்ள கிழக்கு புறம் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இணையவுள்ளது. மற்றொரு குழு ரேவாசனில் தொடங்கி பல்வாலை நோக்கி செல்லும். இந்த குழுக்கள் பல்வாலில் ஒரு பேரணியை நடத்தும். பின்னர் அவர்கள் தொடங்கிய இடத்திற்கு திரும்புவார்கள். இவர்கள் பெரும்பாலும், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள்.” என்று சம்யுக்ட் கிசான் மோர்ச்சா அமைப்பு  தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்