Aran Sei

ஒன்றிணையும் இந்திய விவசாயிகள் : விவசாய சட்டத்திற்கெதிராகத் தீவிரமடையும் போராட்டம்

நேற்று (டிசம்பர் 26),  மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள் குழு டெல்லி எல்லைகளில், விவசாயச் சட்டங்களை நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இணைந்துக் கொண்டது என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

மேலும், அவர்கள் மத்திய அரசுடன் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் மூன்று விவசாய சட்டங்களிலிருந்து சில பிரிவுகளை நீக்கப்பட வேண்டும் என்று கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை ஏன் ரத்து செய்ய வேண்டும்? – மத்திய அமைச்சருக்கு பொருளாதார வல்லுநர்கள் விளக்கம்

இவ்வார தொடக்கத்தில், விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி நடந்து வரும் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாசிக் நகரிலிருந்து டெல்லி எல்லையை நோக்கி புறப்பட்டுள்ளனர்.

“எங்களுக்கு ஷாஜகான்பூர் எல்லையில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எங்களை வரவேற்றும், அவர்களுடன் இணைந்ததற்கு நன்றியும் தெரிவித்தனர்.” என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மகாராஷ்டிரா பிரிவு செயலாளர் அஜித் நவ்லே கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்கள் கள்ளச் சந்தைக்கு வழிவகுத்துள்ளது – மம்தா பானர்ஜி

மேலும், ”விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை மத்திய அரசுடன் விவாதிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த விவசாய சட்டங்களில் சில உட்பிரிவுகள் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும்படியாக இல்லை என்பதால், அந்த பிரிவுகள் அகற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (டிசம்பர் 26), அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களின் தலைமையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லியை நோக்கி நடந்த வாகன அணிவகுப்பில், மகாராஷ்டிராவின் 21 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர் என்று தி இந்து கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்