Aran Sei

‘எங்கள் குடியரசு தின விழாவிற்கு வர வேண்டாம்’ – பிரிட்டன் பிரதமருக்கு விவசாயிகள் கோரிக்கை

குடியரசு தின விழாவிற்கு வருகை புரிவதைத்  தவிர்க்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் விவசாயிகள் சங்க தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாய சட்டங்களை மத்திய அரசு ரத்துசெய்யும் வரை, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசு தின விழாவிற்காக இந்தியா வருவதை தவிர்க்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் முறையிடுமாறு பிரிட்டன்-பஞ்சாபி தலைவர்களிடம், நேற்று (டிசம்பர் 22)  விவசாயிகள் சங்க தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  தெரிவித்துள்ளது.

கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகள் – படங்களை ஏந்தி போராடும் தாய்மார்கள்

மேலும், சிங்கு எல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஹரேந்தர் சிங் லகோவால், “விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்தியாவுக்கு வர வேண்டாம் என்று பிரிட்டன் பிரதமரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இப்போது இங்கிலாந்து அரசியலில் இருக்கும் பஞ்சாப் தலைவர்கள் வழியாகவும் தேர்தலில் வெற்றி பெற்று பிரதிநிதிகளாக உள்ள பஞ்சாப் தலைவர்கள் வழியாகவும் நாங்கள் முறையீடு செய்துள்ளோம்.” என்று கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், வருகை தந்த பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், ஜனவரி மாதம் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமை விருந்தினராக பங்கேற்பார் என்று அறிவித்திருந்தார்.

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் இராணுவ வீரர்கள் – புலனாய்வு அமைப்புகள் விசாரணை

மேலும், இந்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் விவசாயிகள் போராட்டங்களை பற்றி விவாதித்தார் என்றும், பிரிட்டனில் உள்ள பிரிட்டனின் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரை சுட்டிக்காட்டி, உங்கள் அரசியல் ஒருவிதத்தில் எங்கள் அரசியலும் கூட என்று அடிக்கோடிட்டுக் காட்டியதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான தேதியை நிர்ணயிக்குமாறு மத்திய அரசு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிப்பது தொடர்பான கூட்டத்தை இன்றைக்கு (டிசம்பர் 23) ஒத்திவைத்துள்ளதாகவும் அம்பானி மற்றும் அதானி நடத்தும் அனைத்து கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சங்க தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

“போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பார்கள்” – விவசாயிகள் எதிர்பார்ப்பு

மத்திய அரசின் கடிதத்தை பற்றி மேலும் கூறுகையில், மூன்று விவசாய சட்டங்களையும் நீக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்ப்பதற்கு பதிலாக, அச்சட்டங்கள் குறித்து எங்களிடம் பிரச்சாரம் செய்வதற்கான நோக்கத்துடனேயே அரசு செயல்பட்டு வருகிறது என்று விவசாயிகள் சங்க தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்