Aran Sei

ஜியோ சேவையிலிருந்து மாறும் இயக்கம் – பஞ்சாபிலும், போராட்டக் களத்திலும், பிற மாநிலங்களிலும் தீவிரம்

சிங்கு எல்லையில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளிடம் இருந்து லாபம் பார்க்க, ஜியோ சிம் கார்டை , ஏர்டெலுக்கும், வோடாஃபோனுக்கு மாற்ற பல மொபைல் சேவை நிறுவனங்களின் கடைகள் முளைத்துள்ளன. தற்போது வைத்திருக்கும் மொபைல் எண்ணை மாற்றாமல், சேவை நிறுவனத்தை மட்டும் மாற்றும் ‘போர்ட்டபிலிட்டி’ வசதியை வைத்து, விவசாயிகள் பிற மொபைல் சேவை நிறுவனங்களுக்கு மாறிக் கொள்கிறார்கள்.

ஜியோ புறக்கணிப்பு – ரிலையன்ஸ், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கும் விவசாய சட்டங்களுக்கும் தொடர்பு என்ன?

பஞ்சாபில் தொடங்கிய இந்த குறிப்பிட்ட பிரச்சாரம், டெல்லி, ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்திலும் பரவத் தொடங்கியது. பஞ்சாபில், ஜியோ-வில் இருந்து ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்களுக்கு மாறுபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் கடைக்காரர்கள் அளிக்கிறார்கள். 

பிரதமரின் ’மன் கி பாத்’ நிகழ்ச்சியைக் கலாய்த்த விவசாயிகள்

மத்திய அரசின் விவசாயச் சட்டங்களுக்க்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியதில் இருந்தே, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் கௌதம் அதானியின் அதானி குழுமத்திற்கு எதிரான கோபம் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. 

சிங்கு எல்லையில் இருக்கும் ஏர்டெல் கடைகள் ஒன்றின் தலைமை பொறுப்பில் இருக்கும் தீபக் சிங், வாடிக்கையாளர்களின் தேவையினால் தான் மொபைல் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். 

“சராசரியாக, ஒவ்வொரு நாளும், ஐநூறு முதல் அறுநூறு பேர் வரை தங்கள் ஜியோ சிம்களை ஏர்டெல், ஐடியா மற்றும் வோடஃபோனிற்கு மாற்றுகிறார்கள். விவசாயிகள், போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்பதால், அவர்களால் உள்ளூரில் கடைகளுக்குச் சென்று மொபைல் நெட்வொர்க்கை மாற்ற முடியாது. அதனால் தான் இங்கே கடைகள் அமைத்துள்ளோம்” என்கிறார். 

ஜியோ கோபுரங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் விவசாயிகள் – தவிர்க்குமாறு சங்கங்கள் கோரிக்கை

“விவசாயிகள் சுயமாகவே வந்து மொபைல் நெட்வொர்க்குகளை மாற்றிக் கொள்கிறார்கள், நாங்கள் சென்று யாரையும் அழைக்கவில்லை” என்று ஏர்டெல் குழுவின் உறுப்பினரான சஞ்சய் தாப்ரா கூறுகிறார். 

கிசான் ஏக்தா மோர்ச்சாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான பல்ஜீத் சிங், “இப்போது வரை 1.50 லட்சம் ஜியோ சிம்கள் ஏர்டெல், ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. மக்கள் தாமாகவே வந்து இந்த புறக்கணிப்பு இயக்கத்தில் பங்கேற்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறினார்.

ரிலையன்ஸ் மற்றும் அதானி தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என சிங்கு எல்லையில், ஒரு பெரிய அளவிலான போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது. 

`ஜியோவைப் புறக்கணியுங்கள்’-பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

கடந்த வாரம், ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள், விவசாய சட்டங்களினால் ரிலையன்ஸிற்கு லாபம் என வதந்தியை பரப்புவதாக ரிலையன்ஸ் ஜியோ இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை நிறுவனத்திடம் ( TRAI) புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

(தி வயர் தளத்தில் வெளியான சிறப்பு செய்தியின் சுருக்கம்)

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்