Aran Sei

’அம்பானி, அதானியை புறக்கணிப்போம்’ – விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டர் ட்ரெண்டிங்

விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் அழைப்பைத் தொடர்ந்து #BoycottJio (ஜியோவை புறக்கணிப்போம்), #BoycottAdaniAmbani (அதானி, அம்பானியை புறக்கணிப்போம்) என்ற ஹேஷ் டேகுகள் டிவிட்டரில் டிரெண்ட் ஆகியிருப்பதாக சியாசட் இணையதளம்  செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியின் சிங்கு எல்லையில் மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களையும் மின்சார திருத்த மசோதாவையும் எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். நேற்று முன் தினம் (டிசம்பர் 9) மத்திய அரசு முன்மொழிந்த சட்டத் திருத்த வரைவை, விவசாயிகள் நிராகரித்ததை தொடர்ந்து,  அம்பானி, அதானிக்குச் சொந்தமான நிறுவனங்களையும், பொருட்களையும் புறக்கணிக்குமாறு அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

`ஜியோவைப் புறக்கணியுங்கள்’-பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் குறிப்பிடும் பொருட்களில் ரிலையன்ஸ் ஜியோ மொபைல் தொலைபேசிகளும், அதன் சிம் கார்டுகளும் அடங்கும் என்று சியாசத் தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் (டிசம்பர் 9) முதலே #BoycottJio  டிரெண்ட் ஆகி வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.  மேலும், #BoycottAdaniAmbani, #BoycottJioMart போன்ற ஹேஷ்டேகுகளும் டிரெண்ட் ஆகி வருகின்றன.

இந்த புதிய சட்டங்கள் விவசாயிகளை மட்டுமே பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா? – சாய்நாத்

புஷ்பேந்திரா என்ற டிவிட்டர் பயனாளர், “விவசாயிகள் மத்திய அரசு முன்மொழிந்த சட்டத் திருத்த வரைவை நிராகரித்து விட்டார்கள், இந்த போராட்டம் தீவிரமடையும் என்று விவசாயிகள் கூறினார். #BoycottAdaniAmbani” என்று ட்வீட் செய்துள்ளதை சியாசத் தளம் மேற்கோள் காட்டியுள்ளது.

மேலும், பல டிவிட்டர் பயனர்கள் தங்கள் ஜியோ மொபைல் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஃபைபர்நெட் இணைப்புகளை ரத்து செய்வது குறித்து பதிவிடத் தொடங்கியுள்ளனர். தொலைபேசி எண்ணை வேறு சேவைக்கு மாற்றுவது (போர்ட்டிங்) மற்றும் கணக்கை ரத்து செய்வதற்கான கோரிக்கைகளின் ஸ்கிரீன் ஷாட்களை அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். மற்றவர்களும் இதைச் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

அழிவின் விளிம்பில் பிஎஸ்என்எல் – மக்களுக்கான நிறுவனம் மடியக் காரணம் என்ன?

தீபக் ப்ரஜபதி என்ற ட்விட்டர் பயனாளர், “நான் ஆரம்பித்து விட்டேன். மற்றவர்களிடமும் இதை செய்ய  கோரிக்கை வைத்திருக்கிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதானியின் பிராவஸ் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுற்றுச்சூழல் இயக்கமான “ஸ்டாப் அதானி”யின் அதிகாரப்பூர்வ கணக்கு #BoycottAdaniAmbani க்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளது.

`அதானிக்குக் கடன் வழங்காதே’ – சிட்னி மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

மேலும், மோடி மற்றும் அதானியின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் செய்து வரும்  இந்திய விவசாயிகளுக்கு நாங்கள் துணை நிற்போம் என்று “ஸ்டாப் அதானி” குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்