Aran Sei

தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கம் – சுங்கச் சாவடிகள் முற்றுகை – விவசாயிகள் போரட்டம் இன்று

credits : the hindu

த்திய அரசு கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மேலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லையில் குவிந்து வருகின்றனர் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தற்போது நடந்துக் கொண்டிருக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கு விவசாயச் சங்கங்கள் விடுத்த அழைப்பில் பல விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்துள்ளனர். போராட்டத்தின் அடுத்த கட்டமாக, இன்று டெல்லி ஜெய்பூர் நெடுஞ்சாலையை முடக்கவும், சுங்கச் சாவடிகளில் மறியல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

credits : the hindu
credits : the hindu

நிலைமையை கட்டுக்குள் வைக்கவும் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் பயணிகளுக்கு மாற்று வழியை ஏற்படுத்தவும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்து வெளியிட்டுள்ளது.

”தர்ணா நடக்கும் இடங்களான சிங்கு, திக்ரி, காசிப்பூர், பல்வால் ஆகிய பகுதிகளில் தற்போது அதிக அளவிலான விவசாயிகள் சேர்ந்து வருவதாக அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

“தமிழ்நாட்டிலிருந்து விவசாயிகள் வந்துள்ளதாகவும் ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் குழுக்கள் விரைவில் டெல்லி போராட்டத்தில் இணைந்து கொள்வார்கள்” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் குறித்த பிரதமரின் உளறல் தேசத்திற்கே அவமானம் – இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்

அமிர்தசரஸில், கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் சமிதியின் கீழ் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் டெல்லிச் செல்ல டிராக்டர்-டிராலி அணிவகுப்பை தொடங்கியுள்ளனர். அமிர்தசரஸில் பயணிகள் ரயில்களின் போக்குவரத்தை தடுக்கும் ‘ரெயில் ரோகோ’ போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கும் அமைப்பு சமிதி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

“அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் வணக்கம் செலுத்திய பின்னர் நாங்கள் டெல்லிக்கு எங்கள் அணிவகுப்பைத் தொடங்கியிருக்கிறோம். அமிர்தசரஸ், குர்தாஸ்பூர், டார்ன் டரன், ஃபெரோஸ்பூர், பாசில்கா, ஜலந்தர் மற்றும் மோகா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பயணத்தை தொடங்கி விட்டனர்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் : விருதுகளைத் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்!

”மருந்து, உணவுப் பொருட்கள் மற்றும் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் எங்களின் டிராக்டர்கள், தள்ளுவண்டிகள், கார்கள், வேன்கள் போன்றவற்றில் நாங்கள் கொண்டு செல்கிறோம். நாங்கள் இன்று இரவு ஹரியானாவில் உள்ள ஷாபாத்தில் நிறுத்தப்படுவோம், சனிக்கிழமை டெல்லி நோக்கி செல்வோம் ”என்று சமிதியின் பஞ்சாப் பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.

”டெல்லி எல்லையில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் எந்தக் காரணத்தினாலும் அதன் வேகத்தை இழக்க விடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். எங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்த்து விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

புதியச் சட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு பயனளித்து அரசாங்க கொள்முதலை முடிவுக்குக் கொண்டுவரும் எனவும் இதன் விளைவாக குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாமல் போய்விடும் என பாந்தர் தி இந்துவிடம் கூறியுள்ளார்.

இணையத்திலும் வலுக்கும் விவசாயிகள் போராட்டம் – புலம்பெயர் இந்தியர்கள் ஆதரவு

புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை பாதிக்கப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது, இந்தச் சட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் என்று கூறுகிறது.

விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 14-ம் தேதி ‘ஷம்பு எல்லையில்’ போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் ஜாகர் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஆக்ரா நெடுஞ்சாலையின் வண்டிப்பாதைகள் கடந்த ஒரு வாரமாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பல்வாலில் முடக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் போராட்டம் : ’பத்மஸ்ரீ’ விருதை திருப்பி அளித்த கவிஞர்

உத்தரபிரதேசத்தின், பாரதிய கிசான் யூனியனின் ஒரு பிரிவு, சுங்கச் சாவடிகளை முற்றுகையிட திட்டமிட்டுள்ளது. “நாங்கள் சுங்கச் சாவடிகளில் மறியல் செய்வோம், இதனால் நாளை சாவடிகளில் பணம் சேகரிக்க முடியாது. நாங்கள் சாலையைத் தடுக்க மாட்டோம், ஆனால் பயணிகளை ஒரு நாள் இலவசமாக செல்ல அனுமதிப்போம், ”என்று அந்தச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தர்மேந்திர மாலிக் கூறியுள்ளார் என தி இந்து செய்தி கூறுகிறது.

டெல்லி மற்றும் ஹரியானாவை இணைக்கும் பல்வேறு மாவட்டச் சந்திப்புகளிலும் சுங்கச்சாவடிகளிலும் 5,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.சமூக விரோத சக்திகளைக் கண்காணிக்கவும் அடையாளம் காணவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்