Aran Sei

‘அரசியல் கட்சிகள் தங்கள் கொடிகளை வீட்டில் விட்டு, போராட்டத்திற்கு வாருங்கள்’ – விவசாயிகள்

விவசாய சட்டங்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள பாரத் பந்த்தில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகள், தங்களுடைய கட்சிக் கொடிகளை வீட்டிலேயே வைத்து விட்டு வந்து, விவசாயிகளுக்கு ஆதரவு தாருங்கள் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளர்.

நேற்று (டிசம்பர் 7), டெல்லி சிங்கு எல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கிரந்திகாரி விவசாய சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால், ” நாங்கள் அரசியல் கட்சிகளின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். ஆனால் அவர்களது சொந்தக் கட்சி கொடிகளையும் பதாகைகளையும் வீட்டிலேயே வைத்து விட்டு வந்து, விவசாயிகளுக்கு மட்டும் ஆதரவாக நிற்குமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டம் – வரலாறு படைக்கும் பெண்கள்

மேலும், விவசாயிகள் போராட்டம் அரசியல் கட்சிகளின் நிதிப்பங்களிப்பில் நடப்பதாக குற்றஞ்சாட்டிய ஒன்றிய அரசின் கருத்திற்கு பதிலளித்த தர்ஷன் பால், “கெஜ்ரிவால் (தில்லி முதல்வர்) கூட இன்று காலை வந்தார். ஆனால் நாங்கள் அவருக்கு எங்கள் மேடையை கொடுக்கவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

”நாங்கள் நவம்பர் 27-ம் தேதி முதல் இங்கு இருக்கிறோம். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள், அரசியல் கட்சிகளிடமிருந்து நிதி வாங்குவதாகவோ அல்லது எங்கள் மேடையில் வந்து பேச அனுமதிப்பது போன்றோ ஒரு சம்பவத்தை கூட நீங்கள் காட்ட முடியாது. நாங்கள் இதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

‘விவசாயிகள் நிலங்களை இழந்து, அழிந்து போவார்கள்’ – அகிலேஷ் யாதவ்

இதுவரை, தேசிய கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் உட்பட, 24 அரசியல் கட்சிகள் நாடு தழுவிய அடைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று விவசாயிகளின் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என்றும் இதனால் எந்தவொரு அத்தியாவசிய அல்லது அவசர சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று விவசாய சங்கங்கள் கூறியுள்ளன.

விவசாயிகள் அழைப்புவிடுத்த முழு அடைப்பு – ஒன்றிணையும் தமிழகக் கட்சிகள்

பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தலைவரான பல்பீர் சிங் ராஜேவால், விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் சங்கங்கள், அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு, உச்ச நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ். அதிகாரிகள் சங்கங்கள் ஆகியவை விவசாயிகளின் பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும், “உலகம் எங்கள் போராட்டத்தைக் பார்த்துக்கொண்டிருக்கிறது. கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பஞ்சாபியர்களும் இந்தியர்களும் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கான சட்டமல்ல, முதலாளிகளுக்கான சட்டம் : ஜெயரஞ்சன் – வீடியோ

”பாரத் பந்தின் போது வன்முறையோ அசம்பாவிதங்களோ எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சமூக விலகல் மற்றும் முக்கவசங்கள் போன்ற அனைத்து தொற்று தடுப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுவதில் முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.” என்று ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

மேலும், டெல்லி முழுவதும் கூடுதல் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அதிகாரி கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்