Aran Sei

உண்மை சரிபார்ப்பு – செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை அகற்றவுமில்லை, காலிஸ்தான் கொடியை ஏற்றவும் இல்லை

Image Credit : thewire.in

த்திய அரசின் விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களின் ஒரு பகுதியாக, குடியரசு தின டிராக்டர் பேரணிக்கான காசிப்பூர், சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளிலிருந்து ஒப்புக் கொள்ளப்பட்ட வழித்தடங்களை விவசாய சங்கங்களும் டெல்லி காவல்துறையினரும் வெளியிட்டனர்.

போராட்டக்காரர்கள் டெல்லிக்குள் நுழைவார்கள், ஆனால் மூன்று நுழைவு இடங்களிலிருந்து எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் மட்டும் பேரணி நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால், பல போராட்டக் குழுக்கள் இந்தப் பாதைகளை விட்டு வெளியேறினர். போலீஸ் தடியடியையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் எதிர் கொண்டனர். அவர்கள் டெல்லியின் முக்கிய அடையாளமான செங்கோட்டைக்குள் நுழைந்தனர். சுதந்திர தினத்தன்று இந்திய மூவண்ணக் கொடியை ஏற்ற பயன்படுத்தப்படும் சில மாடங்கள் மீதும் ஒரு கொடிக் கம்பத்தின் மீதும் கொடிகளை ஏற்றினர்.

இதன் அடிப்படையில்

1) போராடும் விவசாயிகள் இந்திய தேசியக் கொடியை நீக்கினர்
2) மூவர்ணக் கொடியை நீக்கி விட்டு காலிஸ்தான் கொடியை ஏற்றினர்.

என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

https://twitter.com/APMLOfficial_/status/1353990089739808768 (ட்வீட் நீக்கப்பட்டு விட்டது)

செங்கோட்டையில் இந்தியக் கொடி அகற்றப்பட்டு காலிஸ்தான் கொடி பறந்து கொண்டிருக்கிறது.
– பாகிஸ்தான் முதல்

“இந்த விவசாயிகள் மூவர்ணக் கொடியை அகற்றி விட்டு தங்கள் மதத்தின் கொடியை ஏற்றுவதன் மூலம் சொல்ல வருகிறார்கள்?” சோனம் மகாஜன் கேள்வி எழுப்பினார்.

டைம்ஸ் நவ்-ன் தலைமை ஆசிரியர் ராகுல் சிவசங்கரும் மூவர்ணக் கொடி அகற்றப்பட்டதாகக் கூறினார். ஆனால்  ஏற்றப்பட்டது விவசாயிகள் சங்கக் கொடி அல்லது ஒரு மதப் பிரிவின் கொடி என்று அவர் கூறினார்.

தேசத்தின் மிகவும் வெளிப்படையான சின்னத்தின் மீதான தாக்குதல். அதுவும் குடியரசு தினத்தில். நமது மூவர்ணக் கொடி செங்கோட்டையின் கொடிக்கம்பத்திலிருந்து நீக்கப்பட்டது. இந்தப் போராட்டம் எப்போதுமே, அரசை பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதுதானா? – ராகுல் சிவசங்கர்

கொடிக் கம்பத்திலிருந்து பறக்க விடப்பட்டது காலிஸ்தான் கொடி என்பது சமூக ஊடகங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது. பாஜக டெல்லி செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் குரானா, வருண் காந்தியின் நாடாளுமன்ற செயலாளர் இஷிதா யாதவ், பாஜக ஆதரவாளர்கள் திவ்யா குமார் சோதி, விக்ராந்த் குமார், சுமித் கடெல், சுமித் கடெல், சுமித் தக்கார், அனுராக் தீட்சித்யா, ஷெபாலி வைதியா ஆகியோர் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களின் அடங்குவர்.

வலதுசாரி பிரச்சார வலைத்தளமான Opindia ஒரு கட்டுரையில் , போராட்டக்காரர்கள் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை பறக்க விட்டனர் என்று எழுதியது.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

பிற பாஜக சார்பு பிரச்சார டிவிட்டர் கணக்குகளான @NindaTurtles, @ExSecular and @IamMayank_ made similar போன்றவையும் இதே போல ட்வீட் செய்தன.

உண்மை சரிபார்த்தல்

இந்த உண்மை சரிபார்த்தல் இரண்டு பிரிவுகளாக செய்யப்படுகிறது. அவை இரண்டு பிரச்சாரத்தையும் தனித்தனியாக விளக்குகின்றன.

1. இந்தியக் கொடி மாற்றப்படவில்லை அல்லது நீக்கப்படவில்லை

போராட்டக்காரர்கள் வெற்று கொடிக் கம்பத்தில் ஒரு கொடியை ஏற்றினர். அவர்கள் இந்தியக் கொடியைக் கழற்றவோ அல்லது அதற்கு பதிலாக காலிஸ்தான் கொடியை ஏற்றவோ செய்யவில்லை. இதை உறுதிப்படுத்தும் பல வீடியோக்கள் உள்ளன. கீழேயுள்ள வீடியோவில், போராட்டக்காரர் வெற்றுக் கம்பத்தில் ஏறும்போது செங்கோட்டையின் நுழைவாயிலான லாகூர் வாயிலின் மேல் மூவர்ணக் கொடி பறப்பதைக் காணலாம்.

டெல்லியில் உள்ள செங்கோட்டையின் கோபுரங்களிலிருந்து ஒரு போராட்டக்காரர் ஒரு கொடியை ஏற்றியுள்ளார் – ANI

இந்தியக் கொடியை பல படங்களில் காணலாம்.

செங்கோட்டை இப்போது போராட்டக்காரர்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களால் ஏற்றப்பட்ட கொடியை அகற்ற காவல்துறை இப்போது மேலே ஏறிக்கொண்டிருக்கிறது. – இந்தியன் எக்ஸ்பிரஸ்

கோட்டையின் மாடங்கள் மீதும் கொடிகள் ஏற்றப்பட்டன.

2. போராட்டக்காரர்கள் ஏற்றியது காலிஸ்தான் கொடி அல்ல

போராடும் விவசாயிகளால் ஏற்றப்பட்ட கொடிகள் நிஷன் சாஹிப் அல்லது சீக்கிய மதக் கொடிகள்.

“மஞ்சள் அல்லது காவி நிறத்தில், காந்தாவுடன் (இரண்டு வாள்கள்) கூடிய முக்கோணக் கொடிகள் சீக்கிய கொடிகள். அவை காலிஸ்தான் கொடிகள் அல்ல ”என்று பஞ்சாப் : ஜர்னிஸ் த்ரூ ஃபால்ட் லைன்ஸ் நூலின் ஆசிரியர் அமன்தீப் சந்தூ கூறினார்.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

அவர் மேலும் கூறுகையில், “ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக ஒரு கொடி ஏற்றப்படும் போது, ​​முந்தைய கொடி வீழ்த்தப்பட்டு புதிய கொடி பறக்க விடப்படுகிறது. இந்த நிகழ்வில், மூவர்ணக் கொடி தொடர்ந்து பறந்து கொண்டிருக்கிறது. அதைத் தொடவில்லை. சீக்கியக் கொடியை ஏற்றுவது என்பது தேச மக்களும் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த விரும்புகிறார்கள் என்பதாகும். அவர்களும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். தேசத்தின் ஆட்சியாளர்கள் அவர்களை குறைவாக மதிப்பிடக் கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள். ”

பத்திரிகையாளர் ஹர்த்தோஷ் சிங் பால் ஏற்றப்பட்ட கொடிகள் சீக்கிய மதக் கொடிகள், காலிஸ்தான் கொடி அல்ல என்று ட்வீட் செய்தார்.

இன்னொரு பக்கம், ராமர் கோயில்தான் உத்தர பிரதேச அரசின் குடியரசு நாள் வண்டியில் இடம் பிடித்திருக்கிறது. அதே நாளில் சீக்கிய கொடி ஏற்றப்பட்டதை பிரச்சினையாக காட்டுகிறார்கள் வலதுசாரிகள்.
– ஹர்த்தோஷ் சிங் பால்

குடியரசு தின அணிவகுப்புகளின் போது பஞ்சாப் மாநில வண்டிகளில் சீக்கிய கொடிகள் இடம்பெறுகின்றன. இது இந்த ஆண்டும் சீக்கிய கொடி ஏற்றப்பட்டிருந்தது.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

கீழே உள்ள ஸ்கிரீன் ஷாட் கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியின் போது போராட்டக்காரர்களால் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது என்ற பரவலான கூற்று தவறானது. கொடி ஏற்றப்பட்ட கம்பம் காலியாக இருந்தது, ஆனால், பலர், இந்திய தேசியக் கொடியை நீக்கி விட்டு இந்தக் கொடியை ஏற்றினர் என்று கூறியது தவறானது.

thewire.in தளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்