Aran Sei

சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படும் பஜ்ரங் தளம் – தடை செய்ய அச்சப்படும் ஃபேஸ்புக் நிறுவனம்

credits : outlook

பஜ்ரங் தளம் அமைப்பை சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இருந்து தடை செய்தால், அந்நிறுவனத்தின் ஊழியர்களும் அதிகாரிகளும் பஜ்ரங் தளம் உறுப்பினர்களால் ஆபத்து ஏற்படலாம் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவினர் எச்சரிதுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது

விஷ்வ இந்து பரிஷத் இயக்கத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளம் இந்துத்துவத்தையும், வலதுசாரி கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டது. அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவது, இந்து சமயத்தைக் காப்பற்றுவது, மதமாற்றங்களைத் தடுப்பது இதன் அடிப்படை கொள்கைகளாகக் இருக்கின்றன.

இந்த ஆண்டு தொடக்கத்தில், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை ஆதரிக்கும்  ’ஆபத்தான அமைப்பு’ பஜ்ரங் தளம், என ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை அமைப்பை, சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில், கருத்துக்களை பதிவு செய்வதில் இருந்து தடை செய்யப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்படதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, “ஃபேஸ்புக்கில் இயங்க பஜ்ரங் தளம் அமைப்புக்கு தடை விதிப்பதென்பது இந்தியாவில் ஃபேஸ்புக்கின் வணிக வாய்ப்புகளை பாதிப்படைய செய்வது மட்டுமின்றி இந்தியாவை ஆளும் இந்துத்துவ கோட்பாட்டை கொண்டுள்ள அரசியல்வாதிகளை ஆத்திரப்படுத்தும் செயல் என ஃபேஸ்புக் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், இந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களும் அதிகாரிகளும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த நபர்களால் உடல் ரீதியான தாக்குதல்களை கூட சந்திக்க நேரலாம் என பாதுகாப்புக் குழுவால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

credits : pti
credits : pti

இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனம் ஏற்படுத்தியுள்ள கட்டமைப்பையும், அதில் பணியாற்றும் ஊழியர்களையும் பயங்கராவாதிகள் தாக்கக்கூடும்  என்று எண்ணியதால் பஜ்ரங் தளம் அமைப்பை சமூக வலைதளமான ஃபேஸ்புக் தடை செய்யவில்லை என தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் டெல்லிக்கு வெளியே இருக்கும் ஒரு தேவாலயத்தை பஜ்ரங் தளம் அமைப்பினைச் சேர்ந்தவர்களால் தாக்கப்படுவதை  ஃபேஸ்புக்கில் இரண்டரை லட்சம் பேர் பார்த்துள்ளதையும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்  பதிவு செய்திருக்கிறது. இந்தச் செயலுக்கு பின்னரும் கூட பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வதில் ஃபேஸ்புக் ஆர்வம் காட்டவில்லை.

ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் பல்வேறு நாடுகளில் அந்த நாடுகளுக்கென்று தனி ஃபேஸ்புக் நிறுவனமோ ஊழியர்களோ இல்லை. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை புது தில்லி, மும்பை உட்பட ஐந்து இடங்களில் ஃபேஸ்புக் அலுவலகங்கள் செயல்பட்டு வருவகிறன.

“கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் செல்லும் இந்துக்களை தாக்குவோம்” – பஜ்ரங் தளம் எச்சரிக்கை

முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய வணிக நலன்களுக்காக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தி வால் ஸ்டிரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது. மேலும் ஃபேஸ்புக்கின் முன்னால் நிர்வாகி அங்கி தாஸ் இஸ்லாமிய விரோத கருத்துக்களை முன்வைத்த பாஜக தலைவருக்காக பரப்புரை செய்தததாகக் குற்றஞ்சாட்டப்பதும் குறிப்பிடத்தக்கது.

`அரசியல்வாதிகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிவது எங்கள் பொறுப்பல்ல’ – ஃபேஸ்புக் நிறுவனம்

பஜ்ரங் தளம் அமைப்பிலிருந்து மட்டுமல்லாமல் ஃபேஸ்புக்கில் தீவிரமாக செயல்பட்டு வரும் இந்து தேசியத்தை முன் வைக்கும் வலதுசாரி அமைப்புகளான சனாதன் சன்ஸ்தா மற்றும் ஸ்ரீ ராம் சேனா அமைப்புகளிடமிருந்தும் அச்சுறுத்தல் இருப்பதாக ஃபேஸ்புக்கின் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பதிவிட்டுள்ளது.

“கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் செல்லும் இந்துக்களை தாக்குவோம்” – பஜ்ரங் தளம் எச்சரிக்கை

ஃபேஸ்புக்கின் ஊழியர்கள் குழு ஒரு கடிதத்தை அலுவலகத்தில் சமர்பித்துள்ளது. அதில் மற்ற அமைப்புகள் போல பஜ்ரங் தளத்தையும் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் செயல்பட அனுமதிப்பது வெறுப்பு பேச்சை ஃபேஸ்புக் நிறுவனம் கையாளும் விதம் குறித்த கேள்வியை எழுப்பும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்

இந்த விவகாரம் குறித்து தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் பதிலளித்துள்ள ஃபேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் “ ஃபேஸ்புக் நிறுவனம் ’ஆபத்தான மனிதர் மற்றும் அமைப்பு’ கொள்கையில் உலகளவில் எந்த ஒரு அரசியல் நிலைப்பாடும் கட்சி சார்புமின்றி செயல்பட்டு வருவதாக” பதிலளித்துள்ளார். ஆனால் பஜ்ரங் தளம் அமைப்பால் உள்ள அச்சுறுத்தல் குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்