Aran Sei

போராடும் விவசாயிகளை மத ரீதியாகப் பிரித்தாளும் சூழ்ச்சி – சிரோமணி அகாலி தளம் கண்டனம்

வியாழக்கிழமை அன்று சண்டிகரில் நடந்த தனது மையக் குழு கூட்டத்தில் சிரோமணி அகாலிதள் கட்சி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

”விவசாயச் சட்டங்களின் உட்பிரிவுகளை மாற்ற மத்திய அரசு தயாராக தயாராக இருக்கும் போது, அந்தச் சட்டங்களை ரத்து செய்வதற்கு பிடிவாதம் பிடிப்பது ஏன்?” என சிரோமணி அகாலி தளம் அத்தீர்மானத்தில் கேள்வியெழுப்பியுள்ளது என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

விவசாயிகள் போராட்டம் குறித்த பிரதமரின் உளறல் தேசத்திற்கே அவமானம் – இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 15 நாட்களாக பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் என பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், 50க்கும் மேற்பட்ட விவசாய சங்ககளின் தலைமையில் தலைநகர் டெல்லியில் முகாமிட்டு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசு விவசாயச் சங்கங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயல்வதாக விவசாய சங்க தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் போராடும் விவசாயிகளை மத ரீதியாக பிரிக்க முயல்வதாக சிரோமணி அகாலி தளம் குற்றம் சாட்டியுள்ளது.

சில சங்கங்களிடம் மட்டும் பேச்சுவார்த்தை – விவசாயிகள் ஒற்றுமையை குலைக்க திட்டம்

 

“எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்கிறீர்கள் எனில், அதையெல்லாம் புதிய சட்டத்தில் சேர்த்து விவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முயலாதது ஏன்?” என்று சிரோமணி அகாலி தளத்தின் கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதல் தலைமையில் நடந்த முக்கிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் : விருதுகளைத் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்!

அகாலி தளத்தின் கட்சித் தலைவரின் முதன்மை ஆலோசகர் ஹர்ச்சரன் பெய்ன்ஸ், ”விவசாயிகள் போராட்டத்திற்கு இனவாத மற்றும் பிரிவினைவாத வண்ணங்களில் பூசுவதற்கு நடைபெறும் சதியை அகாலி தளம் கடுமையாக கண்டித்துள்ளது” என கூறியுள்ளார்

“தேசியவாத சிந்தனை மற்றும் தேசபக்தி கொண்ட விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் அமைதியானது மட்டுமல்ல ஜனநாயகமானது என்றும் அது முற்றிலும் மதச்சார்பற்றது” என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை படித்துள்ளார்.

”போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் மகன்கள் தற்போது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக நாட்டின் எல்லைகளை பாதுகாத்து வருகின்றனர்” என்று சிரோமணி அகாலி தளம் தீர்மானம் கூறியுள்ளது.

இணையத்திலும் வலுக்கும் விவசாயிகள் போராட்டம் – புலம்பெயர் இந்தியர்கள் ஆதரவு

”போராடும் விவசாயிகளை இந்துக்களாக, சீக்கியர்களாக, வியாபாரிகளாக பிரிக்க சதிவேலை நடந்து வருகிறது, தேசத்திற்கு எதிராக நடக்கும் இந்த சதியை அகாலி தளம் முழு மூச்சுடன் எதிர்கொள்ளும்” என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

”விவசாயிகள் போராட்டம் என்பது மக்கள் போராட்டம் தான் அது அமைதியான, ஜனநாயகமான, மதச்சார்பற்ற போராட்டம். பாரத் பந்திற்கு சமுதாயத்தின் அனைத்து தரப்பினரிடமும் இருந்து வந்த ஆதரவிலேயே தெரிகிறது” என அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்