Aran Sei

ஜனநாயக விழுமியங்களையும் பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் – உள்துறை அமைச்சகத்திற்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கடிதம்

Credit: News Laundry

னநாயக விழுமியங்களையும் பத்திரிகை சுதந்திரத்தையும் மதிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் உத்தரவிட வேண்டும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (இஜிஐ) கடிதம் எழுதியுள்ளது.

அதில், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான காவல்துறையின் அத்துமீறலை அரசாங்க அறிந்திருக்க வேண்டும்.ஜனநாயக விழுமியங்களையும் பத்திரிகை சுதந்திரத்தையும் மதிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் உத்தரவிட வேண்டும். அதே சமயம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளது.

கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க சிறைகளில் காயத்ரி மந்திரம் ஒலிக்கப்படும் – உத்தரப் பிரதேச சிறைத்துறை அமைச்சர் அறிவிப்பு

இஜிஐ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”ஏப்ரல் 2 தேதி, ஊடகவியலாளர், மனித உரிமை செயல்பாட்டாளர்களின் உடைகளை அகற்றி அவமானப்படுத்திய காவல்துறையின் நடவடிக்கை அதிர்ச்சியையும் சீற்றத்தையும் வரவழைத்தது” என தெரிவித்துள்ளது.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது மகன் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பதிவிட்ட மேடை நாடக கலைஞர் நீரஜ் குந்தர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்  கனிஷா திவாரி மற்றும் அவரது கேமராமேனை காவல்நிலையம் அழைத்து சென்ற காவலர்கள் அவர்களின் உடைகளை அகற்றி அவமானப்படுத்தினர்.

இஸ்லாமிய பழ வியாபாரிகளை புறக்கணிக்க கோரிய இந்துத்துவா தலைவர் – வழக்கு பதியாத பெங்களூரு காவல்துறை

சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து மத்தியபிரதேச முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், ”ஊடகவியலாளர்களை தாக்கும் காவல்துறையினரின் போக்கு மிகவும் கவலையளிக்கிறது. இது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்று எடிட்டர்ஸ் கில்ட் தெரிவித்துள்ளது.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) மற்றும் இந்தியன் வுமன் பிரஸ் கார்ப் (ஐடபிள்யூபிசி) வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ”மத்தியபிரதேச மாநிலம், சீதி மாவட்டத்தில் ஊடகவியலாளர், மேடை நாடக கலைஞர் மற்றும் குடிமக்களின் உடைகளை அகற்ற உத்தரவிட்டு அவமானப்படுத்திய காவல்துறையின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

”ஊடகவியலாளர் மீதான காவல்துறையினரின் அட்டூழியங்கள் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இது போன்ற சம்பவங்களில் பெரும்பாலானவை பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெற்றுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: The Hindu

இந்திய நாடாளுமன்றத்தில் உளறி கொட்டிய ஒ.பி.எஸ்ஸின் மகன் ஒ.பி.ரவிந்தர நாத், கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்