Aran Sei

பாஜக வேட்பாளர் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் – மறுவாக்குபதிவிற்கு உத்திரவிட்ட தேர்தல் ஆணையம்

பாஜக வேட்பாளருக்குச் சொந்தமான வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துச் செல்லப்பட்டதை அடுத்து, அந்த வாக்குப்பதிவு மையத்தில் மறுவாக்குபதிவு செய்யத் தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அசாம் மாநில சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் கரீம்கஞ்ச் மாவட்டம் ரத்னாபரி தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி எண் 149, இந்திரா கே.வி பள்ளியில் வாக்குச்சாவடியில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை பாஜக வேட்பாளரின் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டதாக புகார் எழுந்தது.

வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துச் செல்ல பயன்படுத்திய வாகனத்தை முற்றைகையிட்ட எதிர்கட்சியினர், அந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

“கம்யூனிசம் ஒரு காட்டுத்தீ; அது தன் வழியே வரும் அனைத்தையும் எரித்து தின்று விடும்” – தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் எச்சரிக்கை

தேர்தல் ஆணையத்தின் வாகனம் பழுதடைந்ததால், தனியார் வாகனம் பயன்படுத்தப்பட்டது. அது வேட்பாளருக்கு சொந்தமானது என பின்னர்தான் தெரியவந்தது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தனியார் வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்றது தேர்தல் ஆணையத்தின் போக்குவரத்து விதிமுறை மீறல் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனக்குழுவின் உறுப்பினராக ஜே.என்.யூ துணைவேந்தர் – ஆளுநர் உத்தரவு

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வாக்குச்சாவடி அதிகாரி உள்ளிட்ட நான்கு அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சாவடி எண் 149 கொண்ட, இந்திரா கே.வி. பள்ளி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம்  உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்