Aran Sei

விவசாயிகள் போராட்டம் : டெல்லி காவல்துறைக்கும் துணைராணுவத்திற்கும் வழங்கிய பேருந்துகளை திரும்ப பெற்ற டெல்லி அரசு

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, டெல்லி காவல்துறையினருக்கும் துணை ராணுவப்படையினருக்கும் பயன்படுத்த வழங்கப்பட்டிருந்த 350 அரசுப் பேருந்துகளை திரும்பப் பெறுமாறு டெல்லி போக்குவரத்துக்கழகத்துக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. ஆனால், டெல்லி காவல்துறையானது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.

போராடும் விவசாயிகளை பத்திரிகையாளர்கள் சந்திக்கத் தடை – டெல்லி காவல்துறை நடவடிக்கை

டெல்லி-உத்தரபிரதேச எல்லையிலும் டெல்லி-ஹரியானா எல்லையிலும் போராடும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாத வண்ணம், டெல்லி காவல்துறையும், துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டதற்கு எதிராக இந்த முடிவை டெல்லி அரசு எடுத்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி : PTI

இதுகுறித்து, டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு சென்றுவர டெல்லி காவல்துறையினரும் துணை ராணுவப்படையினரும் பயன்படுத்தும் 576 பேருந்துகளில் 360 பேருந்துகளை நாங்கள் (போக்குவரத்துக் கழகம்) வழங்கியிருந்தோம். சிறப்பு வாடகைக்கு அனுப்பப்பட்ட அந்த பேருந்துகளை திரும்பப் பெற அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து 350 பேருந்துகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

உலோக லத்திகளைப் பயன்படுத்த உத்தரவிடப்படவில்லை – புகைப்படம் வைரலானதால் டெல்லி காவல்துறை விளக்கம்

போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் ஏஎன்ஐ-யிடம் கூறும்போது, “டெல்லி போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள 20 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகளை டெல்லி காவல்துறையினருக்கு சிறப்பு வாடகைக்கு கொடுத்திருக்கிறோம். ஜனவரி 26-ம் தேதி அன்று நடந்த வன்முறையின் போது, ​​பல பேருந்துகள் சேதமடைந்திருக்கின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி காவல்துறைக்கு டெல்லி போக்குவரத்து கழகம் தனது பேருந்துகளை பயன்பாட்டிற்கு வழங்குவது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வழக்கமாகும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்