Aran Sei

தனியார்மயமாக்கப்படும் அரசு நிறுவனங்களில் இட ஒதுக்கீடு ரத்து – முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு உறுதி

னியார்மயமாக்கப்படும் அரசு நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு நடைமுறையைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் (public sector enterprises) அரசாங்கத்தின் பங்கு விற்பனை செய்யப்பட்ட பிறகு, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது ’விரும்பத்தக்கதோ அல்லது சட்டபூர்வமாகவோ சாத்தியமில்லை’ என்று மத்திய அரசு நம்புகிறதாக லைவ்மிண்ட் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நிறுவனங்களில், பட்டியல் வகுப்பினருக்கு 15 விழுக்காடும், பழங்குடியின வகுப்பினருக்கு 7.5 சதவீதமும், இதர பிற்படுத்த வகுப்பினருக்கு 27 சதவீதமும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விவசாய சட்டங்களை ஆராய உச்சநீதிமன்றம் நியமித்த குழு – அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல்

’நிறுவனங்களின் நிர்வாகம் தனியாருக்கு மாற்றப்பட்டவுடன்’ முதலீட்டாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, ஊழியர்களுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும் எனப் பங்குதாரர்களின் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பபட்டிருப்பதாக, தி வயர் தெரிவித்துள்ளது.

2020 ஜனவரி மாதம், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு விவகாரத்தை ஆய்வு செய்யுமாறு பிரதமர் அலுவலகம் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை நிறுவனத்தை (தீபம்) கேட்டுக் கொண்டிருந்தது.

விசாரணை கைதி சிறையில் மரணம் – சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

அரசின் பங்குகளை விற்பனை செய்தபின்னர், வேலை வாய்ப்புகளில் பட்டியல், பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கடுமையாக வீழ்ச்சியடைவது குறித்து பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.

எவ்வாறிருப்பினும், தற்போதுள்ள சட்டங்களின் கீழ், ஒரு தனியார் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது என்பதையும் தீபம் அறிக்கை தெளிவுபடுத்துவதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்