அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், நன்கொடையாக ரூ.1,11,111-ஐ பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்துள்ளார்.
காசோலையுடன் இரண்டு பக்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளார்.
அதில், “லத்திகளையும் வாள்களையும் சுமந்துகொண்டு, வேண்டுமென்றே ஒரு சமூகத்தைத் தூண்டும் நோக்கில் கோஷங்களை எழுப்புவது எந்தவொரு மத விழாவின் பகுதியாகவும் இருக்க முடியாது. அதனால், இத்தகைய நடவடிக்கைகள் இந்து மதத்தை சார்ந்ததாக இருக்க முடியாது. இவற்றின் காரணமாக, மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்கனவே மூன்று அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. இது சமூகத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.” என்று உஜ்ஜைன், இந்தூர் மற்றும் மாண்ட்சவு ர் மாவட்டங்களில் ஏற்பட்ட மோதல்களை திக்விஜய சிங் மேற்கோளிட்டுள்ளார்.
@INCIndia leader @digvijaya_28 has donated Rs 1,11,111 for the construction of #RamMandir to @narendramodi along with a 2 page letter he requested PM to compel the VHP to make public, the detailed statement of account about the collections made in the past @ndtv @ndtvindia pic.twitter.com/2kSKqLakgb
— Anurag Dwary (@Anurag_Dwary) January 18, 2021
’அயோத்தி ராமர் கோயிலுக்கு இதுவரை 100 கோடி நன்கொடை’ – வரிசை கட்டும் பாலிவுட் நடிகர்கள்
“மற்ற மத சமூகங்கள் கோயில் கட்டுமானத்திற்கு எதிரானவை அல்ல என்பதை நீங்கள் (பிரதமர் மோடி) அறிந்திருப்பீர்கள். ஆகவே நாட்டின் பிரதமராக இருக்கும் நீங்கள், ஆயுதங்களை ஏந்தியபடி, பிற சமூகங்களைத் தூண்டும் விதமாக நிதி திரட்டும் ஊர்வலங்களை நிறுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்துங்கள்.” என்று அவர் கோரியுள்ளார்.
மேலும், “கோயிலுக்கான நன்கொடை பணம் எங்கு, எந்த வங்கியில் நன்கொடையாக வழங்கப்பட வேண்டும் என்பது பற்றிய தகவல் என்னிடம் இல்லை என்பதால், இந்த கடிதத்துடன் நான் உங்களுக்கு அந்த காசோலையை அனுப்புகிறேன். ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு ஆதரவாக ரூ.1,11,111 காசோலையை என்னுடைய பங்களிப்பாக அயோத்தி ராம் கோயில் கட்டுமானத்திற்கு வழங்குகிறேன்.” என்று திக்விஜய சிங் அவரது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் உயரமான ராமர் சிலை – நிலத்தையும் வீடுகளையும் இழக்கும் தலித், பிற்படுத்தப்பட்ட மக்கள்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக பல ஆண்டுகளாக செய்யப்பட்ட நன்கொடை வசூல் பற்றிய விரிவான கணக்கை பகிரங்கமாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.