Aran Sei

டெல்லி – 42% குடும்பங்களின் மாதச் செலவு 10000-க்கும் கீழ், 72% பேர் அரசு மருத்துவ சிகிச்சையை சார்ந்துள்ளனர்

Image Credit : indianexpress.com

வம்பர் 2018-க்கும் நவம்பர் 2019-க்கும் இடையில் நடத்தப்பட்ட 1.02 கோடி மக்களை உள்ளடக்கிய டெல்லி அரசின் கணக்கெடுப்பில் பின்வரும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, டெல்லியின் மக்கள் தொகை 1.67 கோடி ஆகும்.

  • இரண்டு லட்சம் குழந்தைகள் “பள்ளிக்குப் போவதில்லை”, இதில் 64,813 பேர் “பணப் பிரச்சினை” காரணமாக பள்ளிக்கு செல்லவில்லை.
    6 முதல் 17 வயதுக்குட்பட்ட 2,21,694 குழந்தைகள் (அல்லது மொத்தத்தில் 9.76%) பள்ளி முறைக்குள் இல்லை. இதில் 1,31,584 பேர் பள்ளிகளிலிரந்து வெளியேறியவர்கள், 90,110 பேர் பள்ளிக்குச் செல்வதில்லை.
  • 0-6 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான பேர் அங்கன்வாடி சேவை பெறுவதில்லை. டெல்லியின் கர்ப்பிணிப் பெண்களில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே அங்கன்வாடி சேவை கிடைக்கிறது.
  • டெல்லி மக்களில் 63% க்கும் அதிகமான பேர் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர், 6% பேர் மட்டுமே டெல்லியின் பெருமையான டெல்லி மெட்ரோவை சார்ந்துள்ளனர்.
  • நகரத்தில் 42.59% குடும்பங்கள் மாதத்திற்கு ரூ 10,000-க்கும் குறைவாகவே செலவிடுகின்றனர், கிட்டத்தட்ட 80% குடும்பங்களிடம் கணினிகள் இல்லை, 29% வீடுகளுக்குள் குழாய் நீர் வசதி இல்லை. கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் கழிப்பறைகள் உள்ளன.
  • மக்கள்தொகையில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பகுதியினர் அரசு மருத்துவ சேவைகளை சார்ந்துள்ளனர். நகரத்தின் மக்கள்தொகையில் 72.87% பேர் அரசு மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் சிகிச்சை பெறுகின்றனர். நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 2.60% பேரில், பெரும்பாலானவர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது
  • 0-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் நான்கில் ஒரு பகுதியினருக்கு எந்த தடுப்பூசியும் போடப்படவில்லை.

ஜூலை 2018 இல் கிழக்கு டெல்லியின் மண்டவாலியில் பட்டினியால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகள் இறந்ததைத் தொடர்ந்து இந்த கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது. அந்தக் குடும்பத்திற்கு ரேஷன் கார்டு இருக்கவில்லை, அவர்கள் ஒரு அறை வீட்டில் வசித்து வந்தனர். அவர்களது இறப்புக்குப் பின் அரசு நடத்திய புலனாய்வில் உள்ளூர் அங்கன்வாடி மையம் இந்தக் குழந்தைகளின் பெயர்களையும் பதிவுகளில் சேர்த்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

மைய தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்ட மொபைல் செயலியைப் பயன்படுத்தி 6,000 க்கும் மேற்பட்ட களப்பணியாளர்களால் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

2020 நவம்பரில் இறுதி செய்யப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை, மதம், சாதி, வருமானம், கல்வி, நாட்பட்ட நோய்கள், தடுப்பூசியின் நிலை, வேலைவாய்ப்பு, விருப்பமான போக்குவரத்து முறைகள் உட்பட நகர மக்களின் சமூக-பொருளாதார நிலைமையை வெளிப்படுத்துகிறது.

  • 47.31% குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ .10,000 முதல் ரூ .25,000 வரை செலவிடுவதாகவும்,
  • 42.5% பேர் மாதந்தோறும் ரூ .10,000 அல்லது அதற்கும் குறைவாக செலவு செய்ததாகவும்
  • ரூ 25,000 முதல் ரூ 50,000 வரை செலவழிப்பவர்களின் பங்கு 8.44% ஆகவும்
  • 1.66% குடும்பங்கள் மட்டுமே மாதத்திற்கு ரூ 50,000 க்கு மேல் செலவிட்டன என்றும்

ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  டெல்லியின் தனிநபர் ஆண்டு வருமானம் 2019-20ல் ரூ 3.89 லட்சம் (அல்லது மாதத்திற்கு ரூ 32,000 க்கு மேல்) ஆக இருந்தது – இது தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம்.

கணக்கெடுக்கப்பட்ட 20.05 லட்சம் வீடுகளில் 21% குடும்பங்களில் கணினிகள் இருந்தன. இவர்களில், 80.15% பேர் இணைய இணைப்பு பெற்றிருந்தனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்