கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறையின் விசாரணை அலட்சியமற்ற முறையில் இருந்ததாகக் கூறி ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட குற்றம்சாட்டப்ப்பட்ட 3 பேரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
டெல்லி பிரிவினைக்குப் பிறகு நடைபெற்ற மோசமான வகுப்புவாத கலவர வரலாற்றை திரும்பப் பார்க்கும் போது, சமீபத்திய வழக்கில் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி விசாரணை நடத்த ஜனநாயகத்தின் பாதுகாவலர்களான விசாரணை அமைப்பு தவறிவிட்டது என கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ் தெரிவித்துள்ளார்.
”இந்த விவகாரத்தில் நீண்ட விசாரணைக்கு பிறகு, பாதிக்கப்பட்டவர், பணியில் இருந்த அதிகாரி, முறையான சாட்சி, விசாரணை அதிகாரி மற்றும் ஒரு காவலர் 5 சாட்சிகளை மட்டுமே காவல்துறையினர் முன்நிறுத்தினர்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்த நீதிபதி வினோத் யாதவ், “இந்த வழக்கில் காவலர் அளித்திருக்கும் வாக்குமூலம், திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. இந்த வாக்குமூலம் வழக்கில் எந்த உண்மையான அல்லது பயனுள்ள தாக்கத்தை அளிக்கவில்லை. வழக்கு விசாரணை முடிந்துவிட்டது என்பதை காட்ட முயற்சித்த காவல்துறை இந்த வாக்குமூலத்தை இணைத்துள்ளது. அதுவும் மிகவும் காலதாமதமாக” என நீதிபதி கூறியுள்ளார்.
இந்த வழக்கில், ‘உண்மையான சாட்சிகள், குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை கண்டுபிடிக்க எந்த உண்மையான முயற்சியும் செய்யாமல்’, வெறும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ததன் மூலம் மட்டுமே வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு விட்டதாக காட்டப்பட்டுள்ளது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், ”இந்த வழக்கில் விபத்தால் பாதிக்கப்பட்டு வலி மற்றும் வேதனை உள்ளானவரின் வழக்கு இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. விசாரணை இரக்கமற்ற மற்றும் அலட்சியமான முறையில் இருந்துள்ளது. வழக்கு விசாரணையில் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையின்மையால், வரி செலுத்துபவர்களின் பணம் மற்றும் நேரம் வீணாகியுள்ளது” என நீதிபதி வினோத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
”இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இல்லை அல்லது இந்த வழக்கில் எந்த பங்கும் வழங்கப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் சம்பவ இடத்தில் இருப்பதை உறுதி செய்ய எந்த சிசிடிவி காட்சிகளோ, சுயாதீன சாட்சிகளோ அல்லது குற்றவியல் ஆதாரமோ இல்லை” என நீதிபதி தெரிவித்துள்ளார்.
நீதித்துறை கட்டமைப்பின் பக்க நின்று பார்க்கும்போது, இது போன்ற வழக்குகளை மனதார அனுமதிக்க முடியாது, இது நீதிமன்றத்தின் விலைமதிப்பற்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என நீதிபதி வினோத் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.