Aran Sei

’அநீதிக்கெதிரான போராட்டம் தொடரும்’ – சிஏஏ போராட்டத்தில் கைதாகி பிணையில் வந்த மாணவர் பிரதிநிதிகள் பிரகடனம்

டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து டெல்லி கலவரக்கில் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு சட்டவிரோத (நடவடிக்கைகள்) தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாணவர் சங்கப் பிரதிநிதிகள் நடாஷா நர்வால், தேவங்கனா கலிதா, ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோர் உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது

கடந்த செவ்வாய் (ஜூன் 15) டெல்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கியபிறகு, அவர்களை விடுவிக்க டெல்லி காவல்துறை கால தாமதம் செய்து வந்த நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் நேற்று (ஜூன் 17) ஆம் தேதி உத்தரவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்காக நிற்பதே மனித அறம் – உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்த கால்பந்தாட்ட வீரர்

பிணை வழங்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்திருந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திர பேடி, “குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீன்தாரர்கள் தொடர்பான விசாரணை நேற்று (ஜூன் 16) மதியம் ஒரு மணிக்குள் முடிவடைந்திருக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். விசாரணை கால தாமதம் ஆகும் என்பதை நீதிமன்ற மறுக்கவில்லை. ஆனால், பிணை வழங்கப்பட்டவர்களை விடுவிக்காமல் இருப்பதற்கு, இது ஒரு நம்பத் தகுந்த காரணமாக இருக்க முடியாது” என தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நடாஷா நர்வால், தேவங்கனா கலிதா இருவரும் இரவு 7 மணிக்கும், ஆசிப் இக்பால் தன்ஹா இரவு 7.30 மணிக்கும் விடுவிக்கபட்டதாக டெல்லி சிறைச்சாலைகளுக்கான தலைமை இயக்குனர் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர் தாக்கப்படும் காணொளி: சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை ஸ்வாரா பாஸ்கர் மீது புகார்

மூவருக்கும் வழங்கப்பட்டுள்ள பிணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டெல்லி காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள மனுமீதான விசாரணை இன்று (ஜூன் 18) நடைபெற இருக்கிற என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

தந்தையின் மரணத்திற்காக நடாஷா நர்வாலுக்கு மூன்று வாரங்களும், பல்கலைக்கழக தேர்வு எழுதுவதற்காக ஆசிப் இக்பால் தன்ஹாவிற்கு இரண்டு வாரங்களும் ஏற்கனவே பிணை பெற்று இருந்த நிலையில், தேவங்கனா கலிதாவிற்கு கடந்த ஆண்டு கைது பிறகு முதல் முறையா பிணை வழங்கப்பட்டுள்ளது.

ட்விட்டரில் காணொளியைப் பகிர்ந்ததற்கு காவல்துறை வழக்கு – ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படுவதாக பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா குற்றச்சாட்டு

நடாஷா நர்வால், “என் தந்தைக்கு நான் தேவைப்படும்போது எனக்குப் பிணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவருடைய கடைசி தருணங்களில் அவருடன் என்னால் இருக்க முடியாமல் போனது.” என தெரிவித்திருப்பதாக தி பிரிண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

”இந்த வாயில்களுக்கு வெளியே இருந்து வானத்தைப் பார்ப்பது நிச்சயமற்றதாகவே இருந்தது. இது எப்போது வரை நீடிக்கும் என எனக்குத் தெரியவில்லை. நாங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் ஜோடிக்கப்பட்டோம், அது மீண்டும் நடக்கலாம். ஆனால் எங்கள் நோக்கமும் செயல்பாடும் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என தேவங்கனா கலிதா கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நிழல்களைக் கொல்லும் நடுப்பகல்’ – ஆதாரம் இல்லாததால் உபா சட்டத்தில் கைதானவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என தெரிவித்துள்ள ஆசிப் இக்பால் தன்ஹா, “அவர்கள் என்னை பயங்கரவாதி, உளவாளி, ஜிஹாதி என்று அழைத்தனர், அது என்னை தொந்தரவு செய்யவில்லை, ஏனென்றால் நான் அவர்களில் ஒருவனாக இல்லை. இந்தத் தீர்ப்பின் மூலம், நீதித்துறை அதன் குடிமக்களுக்கு ஆதரவாக இருக்கும் என்பதை டெல்லி உயர்நீதிமன்றம் நிரூபித்துள்ளது” என தெரிவித்திருப்பதாக தி பிரிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்