Aran Sei

டெல்லி கலவரம் – கொலை குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் – டெல்லி நீதிமன்றம்

credits : the print

வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தின் முக்கிய குற்றவாளி பிரிஜ்மோகன் ஷர்மாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்முறையாக வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

டெல்லி கலவரம் – பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதைகள்

வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை 700-க்கும் மேற்பட்ட  வழக்குகளை பதிவு செய்ததுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளது. டெல்லி காவல்துறை சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் பொதுச்செயலாளரான சீத்தாராம் யெச்சூரி, பொருளாதார அறிஞர் ஜெயதி கோஷ், டெல்லி பல்கலை கழகப் பேராசிரியர் அபூர்வானந்த் போன்றோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

இந்தப் போராட்டத்தில் சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதாக ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் ஆசிப் இக்பால் கைது செய்யப்பட்டார், ஜேஎன்யூ மாணவர்  உமர் காலீத், ஷர்ஜீல் ஆகியோர் மீது சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல்நிலை காரணங்களை கூறியும் பலருக்கும் ஜாமீன் வழங்கப்படாமல் இருப்பது குறிப்பிட்டத்தக்கது.

`உமர் காலித்துக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு’ – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், புதிய உஸ்மான்பூர் பகுதியில் ”இர்ஃபான்” எனும் நபர் கலவர கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிஜ்மோகன் ஷர்மா, தனது தம்பியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் பெற்றுள்ளார் என தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

credits : the guardian
credits : the guardian

டெல்லி நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ், இடைக்கால ஜாமீனை மீறினால் ரூ.50 ஆயிரம் அபராதம் அளிக்க வேண்டும் எனும் பத்திரத்தில் கையெழுத்திட்டப் பின்னரே, அவருக்கு  ஜாமீன் வழங்கியுள்ளார்.

கடந்த நவம்பர் 24-ம் தேதி ஷர்மா தாக்கல் செய்த வழக்கமான ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது தம்பியின் மகள் திருமணத்தில் “கன்யாதான்” போன்ற முக்கியமானச் சடங்குகளைச் செய்வதற்காக கோரிய இடைக்கால ஜாமீன் மனு ஏற்கப்பட்டு,மிகக் குறுகிய காலத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிஜ்மோகன் ஷர்மாவுக்கு இரண்டு வார காலம் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி வன்முறை : இசுலாமியர்களுக்கு எதிராக போலீஸ் பாரபட்சம்

நீதிபதி தனது ஜாமீன் உத்தரவில்,” இந்து புராணங்களில், கன்யாதான் சடங்கு ஆழ்ந்த மத அடையாளங்களை கொண்டுள்ளது, இது ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை எடுத்துக்காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.கன்யாதன் என்பதற்கு சமஸ்கிருதத்தில் “மணப்பெண்ணைக் கொடுப்பது” என்பது பொருள்,மணப்பெண்ணின் பெற்றோருக்கும் தம்பதியினருக்கும் இடையே நடைபெறும் சடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்