Aran Sei

22 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் – முடங்கியது டெல்லி போக்குவரத்து

விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக டெல்லியின் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.

விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் போன்ற பகுதிகளில் விவசாயிகள் செய்துவரும் போராட்டத்தின் 22 வது நாளான நேற்று (டிசம்பர் 16), தில்லி நகருக்கு உள்ளேயும் வெளியேயும்  பல சாலைகள் மூடப்பட்டன.

தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கம் – சுங்கச் சாவடிகள் முற்றுகை – விவசாயிகள் போரட்டம் இன்று

”சிங்கு, ஆச்சண்டி, பியாவ் மணியாரி, சபோலி மற்றும் மங்கேஷ் எல்லை பகுதிகள் மூடப்பட்டுள்ளன. லம்பூர், சஃபியாபாத் மற்றும் சிங்கு பள்ளி சுங்க வரி எல்லைகள் வழியாக மாற்று வழித்தடங்களை செல்லுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், முகர்பா மற்றும் ஜி.டி.கே சாலையில் உள்ள போக்குவரத்து, வேறு பாதைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.” என்று தில்லி நகர காவல்துறையினர் கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

சுங்கச் சாவடிகளைக் கைப்பற்றிய விவசாயிகள் – தொடரும் போராட்டம்

மேலும், வெளிப்புற சுற்றுச்சாலை, ஜி.டி.கே சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 44 ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். ஹரியானா மாநிலம் வழியாக தில்லிக்குள் நுழையும் முக்கிய சாலைகள் அனைத்து முடக்கப்பட்டுள்ளதால், அறிவிக்கப்பட்ட மாற்று சாலைகளில் பயணிக்கும் படி காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உத்திரப்பிரதேசம் மாநிலத்திற்கு செல்லும் முக்கிய சாலைகளையும் விவசாயிகள் முடக்கியுள்ளதால், அதற்கான மாற்று வழித்தடங்களையும் தில்லி காவல்துறை பரிந்துரைத்துள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் மட்டுமின்றி ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து தொடர்ந்து விவசாயிகள் தில்லியை நோக்கி வந்துக்கொண்டிருப்பதால், எல்லையில் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்